பணக்கஷ்டம், உடல் ஆரோக்கியம் போன்ற வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் 1 எளிய பரிகாரம்!

By Ma Riya  |  First Published Apr 5, 2023, 10:47 AM IST

வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு எளிய பரிகாரங்களை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். 


நம் அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகள் நமக்கு வாழ்க்கையில் அனுபவத்தை கொடுக்கின்றன. எந்த பிரச்சினையும் தற்காலிகமானது தான். வாழ்க்கை எப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும் சக்கரம் போன்றது. ஜோதிட சாஸ்திரத்தில் நம்முடைய பிரச்சனைகளுக்கு ஏற்ற பரிகாரங்கள் எப்போதும் பரிந்துரைக்கப்படும் அதை செய்வதன் மூலம் பிரச்சனையை சமாளிக்கும் திறனை பெறுகிறோம். 

உடல்நல பிரச்சனை பரிகாரம் 

Tap to resize

Latest Videos

நீங்கள் தொடர்ச்சியாக உடல் நலத்தில் பிரச்சனைகளை சந்தித்தால் ஜோதிடம் அதற்கு ருத்ர அபிஷேகம் செய்வதை பரிந்துரைக்கிறது. உங்களுடைய வீட்டில் ருத்ரா அபிஷேகம் செய்தால் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். அபிஷேகம் செய்யும் போது 'தத் புருஷாய வித்மஹே! மஹாதேவாய தீமஹி! தன்னோ ருத்ர பிரச்சோதயாத்!' எனும் மந்திரத்தை சொல்ல வேண்டும். இப்படி சுமார் 11 வாரங்கள் சிவலிங்கத்திற்கு ருத்ரா அபிஷேகம் செய்யுங்கள். இதற்கென தனியாக நாள், கிழமை கிடையாது. எந்த நாளிலும் இதை செய்யலாம். 

நோய்கள் விலக

உங்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு நீண்ட நாட்களாக குணம் பெற வில்லை என்றால், பூர்ணிமா அல்லது பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி அல்லது த்ரயோதசியில் சந்திரன் குறையும் வேளையில் (சுக்லபக்ஷம்) பழைய மருந்து மாத்திரையை மாற்றி புது மருந்துகளை உபயோகம் செய்ய தொடங்குங்கள். சின்ன சின்ன உடல் உபாதைகள் உங்களை சிரமப்படுத்தினால் வியாழன் அன்று உங்களுடைய உள்ளங்கையில் மஞ்சள் கடுக்காயை வைத்து, இந்த "ஓம் கணபதியே நமஹ" என 108 முறை உச்சரிக்கவும். இந்த மாதிரி பிரார்த்தனை செய்த பின்னர் அந்த விதைகளை மஞ்சள் துணியில் சுற்றி கொள்ளுங்கள். அதை கழுத்தில் அல்லது கையில் கட்டி கொள்ளுங்கள். விரைவில் நோய்கள் விலகும்.  

தொழில் பிரச்சனை 

உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால், 41 நாட்கள் சூரிய பகவானுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு தேக்கரண்டி கடுக்காயை வைத்து சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞாயிறு அன்று தாகத்தால் வாடும் மக்களுக்கு தண்ணீர் தானம் செய்யலாம். மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வண்ணம் இலவச தண்ணீர் கருவியை பொருத்தி உதவலாம். 

திருமண பிரச்சனைகள் நீங்க

உங்களுடைய மனைவி எப்போதும் காரணங்கள் இன்றி உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், சண்டை போட்டாலும் கல்லறைக்கு பக்கத்தில் உள்ள நீர் ஆதாரத்தில் கொஞ்சம் நீரை எடுத்து வழிபாட்டு இடத்தில் வையுங்கள். வீட்டில் இருக்கும் உறவுகளில் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று 5 பாதாம் விதைகளை தானம் செய்யுங்கள். 

click me!