Panguni Uthiram 2023: இன்று பங்குனி உத்திரம்! பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருக்கோயில்கள்

By SG Balan  |  First Published Apr 5, 2023, 9:11 AM IST

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

panguni uthiram celebrated in temples across tamilnadu

தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாள்  பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

சூரனை சம்ஹாரம் செய்த பின்பு இந்திரனின் மகளான தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் புரிந்தது பங்குனி உத்திரம் நாளில்தான். இந்தத் திருமணம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதனால் அங்கு பங்குனி உத்திரம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Latest Videos

திருமணமாகாதவர்கள் பங்குனி உத்திர நன்னாளில் முருகப் பெருமானை தரிசித்து வழிபாடு செய்வதால் விரைவில் திருமணம்  நடைபெறும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி பங்குனி உத்திர நாளில் வழிபாடு நடத்துவது குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரத்தன்று இந்த 1 பொருளை வீட்டில் வைத்து வழிபட்டால் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்!

மகாபாரதத்தில் அர்ச்சுனன் பிறந்தநாளும் பங்குனி உத்தரத்தன்றுதான். அர்ச்சுனனுக்கு கிருஷ்ண பகவான் கீதையை உபதேசித்ததும் இதே பங்குனி உத்தர தினத்தில்தான். சிவன் பார்வதி திருமணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என ஆகமங்கள் கூறுகின்றன. இதனால், சிவாலயங்களில் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்தரத்தன்று நடைபெறுகிறது. பங்குனி உத்தர நாளில்தான் பிரம்மாவுக்கும் கலைமகளுக்கும் திருமணம் நடந்தது.

ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னரை கரம்பிடித்த நாள் பங்குனி உத்திரம்தான். ராமர் சீதா பிராட்டியை மணந்த நாளும் பங்குனி உத்திரம் நன்னாளில்தான். முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் ரதியின் பிரார்த்தனைக்கு இணங்கி பங்குனி உத்திர நாளில்தான் மன்மதனை எழுப்பித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆராட்டு எனப்படும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

பங்குனி உத்திரம் குல தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் குலதெய்வ கோயில்களுக்கு இன்றைய தினம் சென்று வழிபடுவது விசேஷம். மூதாதையரை வழிபடுவதற்கும் பங்குனி உத்தரம் ஏற்ற நாள் என்று நம்புகின்றனர். இந்நாளில் விரதம் இருப்பது குரு பகவானின் அருளைப் பெற்றுத்தருவதாகவும் நம்பப்படுகிறது.

பங்குனி உத்திரமான இன்று, திருமணம் கைகூடவும், கேட்ட வரம் கிடைக்கவும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image