வனபத்ரகாளியம்மன் கோவிலில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி - முதல்வர் தொடங்கி வைத்தார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.5.30 கோடி மதிப்பில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிகாட்சி மூலம்  தொடங்கி வைத்தார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றங்கரை ஓரத்தில் தேக்கம்பட்டி அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் மகாபாரத கதையுடன் தொடர்புடைய கோவிலாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் ஆடி குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நாட்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2017ம்  ஆண்டு இக்கோவிலுக்கு 3.25 கோடி மதிப்பீட்டில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. பின்னர் கட்டுமான பணிகள், விலை ஏற்றம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு என பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகளாக பணிகள் முடங்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது  மீண்டும்  அந்த பணிகளை துவங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Latest Videos

இந்திய ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை; 55% வரை டிக்கெட்களில் தள்ளுபடி

அதன் துவக்க நிகழ்ச்சியாக இன்று உபயதாரர்கள் நிதி உதவியுடன் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பில் ராஜகோபுர கட்டுமான பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  துவக்கி வைத்தார்.

காதலனை கரம் பிடித்த கையோடு தமிழக ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு பெண்

இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு கட்டுமான பணிகளுக்கு கோவில் அர்ச்சகர்கள் இன்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் வனப்பத்திரகாளி அம்மன் கோவில்  உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதாகல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

click me!