தை அமாவாசை; நீர் நிலைகளில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

By Velmurugan s  |  First Published Jan 21, 2023, 12:12 PM IST

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்குச் சென்று தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கினர்.


தை அமாவாசையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் பொதுமக்கள் நீர் நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தை அமாவாசையான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகாலை 4 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

10 ஆண்டு குடும்ப வாழ்க்கை ஆனால், திருமணம் செய்ய மறுக்கிறார்; மதபோதகர் மீது பெண் புகார்

Latest Videos

undefined

கர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர். அதன் பிறகு கடலில் புனித நீராடி கடற்கரையில் உள்ள விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை மட்டுமல்லாமல் பகவதி அம்மன் கோயில், கன்னியாகுமரி பேருந்து நிலையம், இருசக்கர வாகன நிறுத்தமிடம்  நிறைந்து காணப்படுகிறது. மேலும் தர்ப்பணம் கொடுப்பவரின் பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர கண்காணிப்புக்கு பணியில் ஈடுபட்டுள்ளனர், அதேபோன்று கடல் நீரில் இறங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தை அமாவாசையில் பிரசாரத்தை  தொடங்கிய திராவிட மாடல் ஆட்சியாளர்கள்

இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், அகஸ்தியர் அருவி, கோபாலசமுத்திரம், குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பக்தர்கள் காலை முதலே திரண்டு தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கினர்.

click me!