
பகல் கனவு காண்பவர்களும் உண்டு ஆனால், பகலில் காணும் கனவுகள் பலிப்பதில்லை. அதே நேரத்தில் விடியக்காலை 3.30 - 6.00 மணிக்குள் கண்ட கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேதங்களில் கூறியுள்ளபடி கனவுகள் என்பது நமது ஆழ்மனதில் புதைந்துள்ள ஆசைகளின் வெளிப்பாடாகும்.
தற்கால அறிவியலும் கூட இதைத்தான் சொல்கிறது. அன்றாட வாழ்வில் இருக்கும் நம்முடைய நிறைவேறாத ஆசைகள் மற்றும் நிகழ்வுகள் நமது ஆழமனத்துக்குள் ஒளிந்திருக்கும், நாமே எதிர்பார்க்காத தருணத்தில் அது கனவாக வெளிப்படும். நமது முன்னோர்கள் நமது எதிர்காலத்தை முன்கூட்டியே காட்டும் கண்ணாடி என்று கூறுகிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி உங்களுக்கு வரும் ஒவ்வொரு கனவும் உங்களின் எதிர்காலத்தை பற்றிய ஒரு குறிப்பை உங்களுக்கு கொடுக்கும், அதனை சரியாக புரிந்து கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பொதுவாக அதிர்ஷ்டம், பணவரவு, துக்க நிகழ்வுகள், நஷ்டம் போன்றவற்றை கனவுகள் முன்கூட்டியே வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் வெளியே கூறாத நல்ல கனவுகள் நிச்சயம் பலிக்கும் என்று மத்யாச புராணம் கூறுகிறது. பெரும்பாலும் நமக்கு காலை நேரத்தில் வரும் கனவு மட்டும்தான் நினைவில் இருக்கும். ஒருவேளை இரவின் முதல் பாதியிலோ அல்லது இரண்டாம் பாதியிலோ வந்த கனவு நினைவில் இருந்தால் அது விரைவில் பலிக்கும். அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வரும் கனவுகள் 3 மாதத்துக்குள் பலிக்கும் என்று புராணங்கள் கூறுகிறது.
கனவில் நெல்லிக்காய் சாப்பிடுவது போன்று கண்டால், செல்வம் ஈட்டுவது தொடர்பான ஆசை நிறைவேறப் போகிறது என்று அர்த்தம்.நீங்கள் பணம் சம்பாதிக்க வாய்ப்பு அதிகரிக்கும். ஐஸ்கிரீம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது கனவில் கண்டால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியான, மனதிற்கு குளிர்ச்சியான இதமளிக்கக்கூடிய விஷயங்கள் நடக்கும்.
இதையும் படிங்க..“நான் அவள் இல்லை” கதறி அழுத கணவன்.! கில்லாடி மனைவி - திருமணத்துக்கு பெண் பார்ப்பவர்களே உஷார்..!
அக்ரூட் பருப்புகள், வால்நட் சாப்பிடுவதை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரப்போகிறது என்று அர்த்தம். திடீர் செல்வம் சேர வாய்ப்புள்ளது. புளி சாப்பிடுவதை கனவில் கண்டால் அது நல்ல அறிகுறி. ஆனால் பெண்களுக்கு மட்டும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, நீங்கள் மாம்பழம் சுவைப்பது போன்ற கனவு கண்டால் உங்களுக்கு அபரிமிதமான செல்வத்தைப் பெறப்போகிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
கனவில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதைக் கண்டால், அன்னாசிப்பழத்தைப் போலவே வெளியே முள் போன்று இருப்பது போல முதலில் நீங்கள் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் இஞ்சி சாப்பிடுவது போன்று கண்டால், உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என்று அர்த்தம். இதுபோன்ற பல கனவுகள் வருவதால், அது எதனை குறிக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு