மகா சிவாரத்திரி தினத்தில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கோபுரத்தின் உச்சியில் நடனமாடிய பாம்பை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் சென்றனர்.
உலகம் முழுவதும் மகா சிவராத்திரியானது கடந்த சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும் அன்றைய தினம் சனி பிரதோஷம் என்பதால் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவிலான பக்தர்கள் கோவில்களுக்குச் சென்று சிவனை தரிசித்தனர்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரியகோவில், மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட பல கோவில்களிலும் இசை நிகழ்ச்சிகள், நாட்டியாஞ்சலி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு
இதே போன்று சென்னை திருவெற்றியூரில் உள்ள ஆலயத்திலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோவில் கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், சிவராத்திரி நாளில் கோவில் கோபுரத்தில் தோன்றிய நாகபாம்பு ஒன்று பரவசத்துடன் நடனமாடியதை பக்தர் ஒருவர் பார்த்து அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் கோவில் கோபுரத்தின் உச்சியில் பாம்பு நடனமாடுவதை பக்தர்கள் பலரும் பரவசத்துடன் பார்த்துச் சென்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.