Palli Vilum Palan in Tamil: நமது உடலில் பல்லி விழும் பலன்களை குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவின் பழமையான பாரம்பரியம் மனிதர்கள் மீது பல்லி விழுவதை ஒரு சகுனமாக சொல்கிறது. பல்லி சாஸ்திரம் என்பதும் ஜோதிடத்தின் ஒரு பகுதி. இந்த சாஸ்திரம் உடலில் பல்வேறு பகுதிகளில் பல்லி விழும் பலன்களை விரிவாக விளக்குகிறது. பல்லி விழுந்த நேரம் மற்றும் உடலின் பகுதியைப் பொறுத்து, பல்லி விழுவதற்கு பஞ்சாங்கத்தில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில பலன்கள் சாதகமாகவும், சிலவை பாதகமாவும் உள்ளன.
பல்லி விழுவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில பொதுவான பலன்கள் உள்ளன. ஆண்களின் வலது பக்கத்திலும், பெண்களின் இடது பக்கத்திலும் பல்லி விழுவது சுபமாக கருதப்படுகிறது. இதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. அதே நேரம் பல்லி ஒரு ஆணின் இடது பக்கத்திலோ அல்லது ஒரு பெண்ணின் வலது பக்கத்திலோ விழுந்தால், அசுபமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இரவு நேரங்களில் பல்லி விழுந்தால் எதிர்மறையான விளைவுகளைத் தராது எனவும் கூறப்படுகிறது. ஆண், பெண் இருபாலினத்தவர்கள் தலையின் மீதும் பல்லி விழுவது மோதல்களை உண்டாக்கும். மரண பயத்தை குறிக்கும் என கூறப்படுகிறது.
பெண்கள் மீது பல்லி விழும் பலன்கள்
தலை - மரண பயம்
தலை பின்னல் - சில நோய்கள் குறித்து பயம்
இடது கண் - துணை உங்களை விருன்புவார்
வலது கண் - மன அழுத்தம் ஏற்படும்
வலது கன்னம் - உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்
வலது காதின் மேற்புறம் - பொருளாதார மேம்பாடு கிடைக்கும்
மேல் உதடு - சில அவமானங்களை சந்திப்பீர்கள்
கீழ் உதடு - புதிய பொருள்கள் வாங்கும் யோகம்
உதடு - சில பிரச்சினைகள் வரலாம்
முதுகு - மரண செய்தி வரும்
நகங்கள் - ஏதேனும் பிரச்சனை வரலாம்
கை - நிதி மேம்பாட்டை எதிர்பார்க்கலாம்
இடது கை - மன உளைச்சல் வரலாம்.
விரல்கள் - புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள்
வலது தோள் - ரொமாண்டிக் சம்பவம் வரும்
தோள்ப்பட்டை - புதிய நகைகளை வாங்குவீர்கள்
தொடை- ரொமாண்டிக் விவகாரங்களை சந்திப்பீர்கள்
முழங்கால் - உங்கள் மீது யாரேனும் அன்பு மழை பொழியலாம்