கேரளா திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி ஆலயம் இருக்கிறது. விஷ்ணு ஆலயம், கட்டிடக்கலை அழகு மற்றும் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம்.
அதே அளவுக்கு மர்மமான விஷயங்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி பத்மநாப சுவாமி ஆலயத்தில் ஆறு பெட்டகங்கள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கின்றன. இந்த பெட்டகங்கள் மந்திர சக்தியால் பாதுகாக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது. திருப்பதிக்கு சமமாக, இந்து கோவில்களில் மிகவும் பணக்கார கோவிலாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
ஆனால் மூடப்பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே இருக்கும் மர்மமான பெட்டகங்களில் திருப்பதியை மிஞ்சும் அளவுக்கு கூட பொக்கிஷம் இருக்கின்றது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். பத்மநாத சுவாமி ஆலயம் உலகிலேயே மிகவும் செல்வ வளம் மிக்க ஆலயமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக பல ஆண்டுகளாக கோவிலில் செலுத்தப்படும் நன்கொடைகள் என்று கூறப்படுகிறது.
undefined
பத்மநாப சுவாமி ஆலயத்தை பார்க்கும் பொழுதே அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும். அதன் கட்டிடக்கலை நுணுக்கங்கள் கேரளா மற்றும் அண்டை மாநிலங்களின் கட்டிடக்கலை நுணுக்கங்களையும் சேர்த்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார்.
குளத்தில் உள்ள 3 கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான திருப்பதி ஏழுமலையான் கோயிலையும் இந்த கோயில் முந்தி விட்டது.
இதையும் படிங்க..“நான் அவள் இல்லை” கதறி அழுத கணவன்.! கில்லாடி மனைவி - திருமணத்துக்கு பெண் பார்ப்பவர்களே உஷார்..!
6வது அறையில் ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு இந்த கோயிலில் 6 ரகசிய அறைகள் இருந்தது கோயில் நிர்வாகம் கண்டுபிடித்தது. இதை திறக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் ரகசிய அறைகளை திறக்க உத்தரவிடப்பட்டது.
கோயிலில் உள்ள எ,பி,சி,டி, இ, எஃப் என 6 ரகசிய அறைகளில் முதலில் எ,பி,சி ஆகிய மூன்று அறைகள் திறக்கப்பட்டன. அதில் சி அறையில் கழுத்து குடம் 20, கைப்பிடியுடன் கூடிய தங்க குடம் 1, தங்க எழுத்தாணி 1, சிறிய தங்க குடங்கள் 340, வெள்ளி விளக்குகள் 30, சிவன், நாகர் சிலைகள், 30 பால்கிண்டி, பல தங்க மோதிரங்கள், வளையல்கள். நெற்றிச்சுட்டி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன.
எடுக்க எடுக்க நகைகள், பாத்திரங்கள் என வந்து கொண்டே இருந்தன.தங்கம், வைரம், சிலைகளை இயந்திர தராசில் எடைப்போட்டதில் ரூ. 450 கோடிக்கும் அதிகமான மதிப்பு இருக்கும் என மதிப்பிட்டனர். கோயிலின் நளம்பலத்தின் வட பகுதியில் இருந்த டி அறையையும், தென்கிழக்கில் தேக்கடம் நரசிம்மர் கோயில் செல்லும் வழியில் இருந்த எஃப் அறையும் திறக்கப்பட்டன.
அதே போல் ஒவ்வொரு அறையிலும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வைடூரியம் தங்க பாத்திரங்கள், தங்க சுவாமி சிலைகள் என ஏராளமானவை கிடைத்தன. இதன் மதிப்பு ஒட்டுமொத்தமாக ஒருலட்சம் கோடிக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு