திருப்பதி கோயிலுக்கு தங்கத்தில் அபிஷேக சங்கு வழங்கிய சுதா - நாராயணமூர்த்தி தம்பதி

By SG Balan  |  First Published Jul 16, 2023, 11:09 PM IST

இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி இருவரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சங்கு சக்கரம் நன்கொடையாக அளித்துள்ளனர்.


இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி இருவரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தங்கத்தால் ஆன அபிஷேக சங்கு ஒன்றை தானமாக வழங்கியுள்ளனர். இது மட்டுமின்றி ஆமை போல வடிவமைக்கப்பட்ட சக்கரம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

மனைவி சுதா மூர்த்தி தம்பதி ஞாயிற்றுக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சென்று வழிபாடு செய்தனர். அப்போது அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனம் செய்து முடித்த பின் வேத மந்திரங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Latest Videos

undefined

தமிழ்நாடு தினம் நவ 1க்குப் பதிலாக ஜூலை 18க்கு மாற்றப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

பின்னர், நாராயணமூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி இருவரும் ரங்கநாயகுலா மண்டபத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரியான தர்மா ரெட்டியைச் சந்தித்தனர். அவரிடம் தங்கள் நன்கொடையாக தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு சக்கரத்தை நன்கொடையாக அளித்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அளித்த சங்கு சக்கரத்தின் எடை மற்றும் மதிப்பு பற்றி கேட்டபோது, சுதா மூர்த்தி பதில் அளிக்கவில்லை. "கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறோம். அதுபற்றி இனிமேல் பேச வேண்டாம்" என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

சுதா மூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அடிக்கடி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

click me!