உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலிலும் மன அமைதி, அருமையான வெற்றி கிடைக்கும். ஆனால் எதிர்மறை ஆற்றல் இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே அடிக்கடி உடல்நல குறைபாடுகள் ஏற்படும் மற்றும் உறவுகளுக்கிடையே நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்படி உங்களது வீட்டில் மோசமான விஷயங்களைத் தரக்கூடிய எதிர்மறை சக்திகள் உள்ளது என்பதை மூன்று பச்சை எலுமிச்சை பழங்களை வைத்து கண்டுபிடிக்கலாம்.
எலுமிச்சை பழங்களை வைத்து தீய சக்தியை விரட்டுவது எப்படி?
- முதலில் ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை எடுத்து அதனை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வட்ட வடிவில் வைத்து, அதன் நடுவே ஒரு எலுமிச்சையை வைக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்தால், உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
- நீங்கள் அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடத்தில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை கண்டிப்பாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
- அதுபோல் மூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி உங்கள் வீட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்க வேண்டும். அப்படி அங்கு வைத்த எலுமிச்சை பழம் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் மாறினால் அதனை தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் அப்பகுதியில் புதிய எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்.
- உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் அகல, தூய்மையான மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும்.
- உங்கள் உறவுகள் வழுவாக, ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனை உங்கள் வீட்டில் உள்ள மேஜையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடைந்த உங்கள் உறவுகள் பலப்படும்.
- நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது 1 எலுமிச்சையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின் நீங்கள் உங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தால் அது எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை சுற்றிய அதிக எதிர்மறை ஆற்றல் இருந்துள்ளது என்று அர்த்தம்.
- நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து கொள்ள வேண்டும். பின் அதனை உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து நீங்கள் தூங்கும்
- கட்டிலுக்கு அடியில் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைஉங்கள் கைகளால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்து விடுங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் புறா கூடு கட்டினால் தடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறும்!!