Sankatahara Chaturthi: ஆடி சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று; விநாயகருக்கு விரதம் இருந்தால் கேது தோஷம் நீங்குமா?

By Dhanalakshmi G  |  First Published Jul 24, 2024, 1:56 PM IST

ஆடி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை வழிபட்டால் நீண்ட காலமாக திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய தினம் சங்கடஹரசதுர்த்தி என்பதால் நாம் விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நீங்கும்.


சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?:
திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம். மனிதர்களுக்கு வரும் சங்கடங்களை நீங்கும் சங்கடஹர சதுர்த்தி. இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம் ஆகும். அமைதியே வடிவான விநாயகப் பெருமானை வணங்கி எந்த காரியத்தையும் செய்தால் வெற்றியாக அமையும். தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவிக்க கடன் பிரச்சினை தீரும்.

தடை நீக்கும் விநாயகர்
கேது திசை புக்தி நடப்பவர்களும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். சங்கடஹர சதுர்த்தி என்பது  மாலை நேரத்தில் சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதத்தை மேற்கொள்வது மூலம் நல்ல மண வாழ்க்கை அமையும்.  சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும்.  

Thulasi, Maruthani in Dreams: கனவில் வரும் துளசி செடி.. நல்லதா? கெட்டதா? கனவு சாஸ்திரம் சொல்லும் பலன் இதுதான்!

பொருளாதார நிலை உயரும்:
புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.  குடும்பத்தின் பொருளாதார நிலை  உயரும்.

சனிதோஷம் நீங்கும்
ஏழரை சனி, அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநாயகரை வழிபடுவதன் மூலம் துன்பங்கள் நீங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.  சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

Tap to resize

Latest Videos

Aadi Month | ஆடி மாசம் தொடங்கியாச்சு! மதுரை அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் டூர் போலாமா? முழு தகவல் இதோ..!

click me!