Sopna Sasthiram: ஆடி மாதத்தில் கனவில் வரும் முன்னோர்கள் உணர்த்தும் உண்மை என்ன? கனவு சாஸ்திர பலன்கள்!!

By Dhanalakshmi G  |  First Published Jul 24, 2024, 12:40 PM IST

கனவில் அடிக்கடி இறந்து போன முன்னோர்கள் வந்து பேசுவார்கள். நம்முடைய தாத்தா பாட்டி வீட்டிற்கு வருவது போலவும் நம்முடன் சாப்பிடுவது போலவும் கனவு வரும். இப்படி மறைந்த முன்னோர்கள் ஆடி மாதத்தில், புரட்டாசி, தை மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டிதான் கனவில் வருவார்கள். இறந்தவர்கள் கனவில் வந்தால் நமக்கு நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா? கனவு சாஸ்திரம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம். 


உறக்கத்தில் வரும் கனவுகள்
 பகலில் வரும் கனவு பலிக்காது என்று கூறுவது உண்டு. ஆனால், அதிகாலையில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்கொலை கனவுகள்
மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டமும், மலத்தை கனவில் கண்டால் பண வரவும், மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகளும், இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நல்லதே நடக்கும். 


ஜாக்பாட் அடிக்கும்:
மறைந்த உங்கள் தந்தை கனவில் வந்தால் தீர்க்கவே முடியாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். இறந்தவர் கனவில் வந்தால் அல்லது இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு வந்தால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் உங்களை தேடி வரும். இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு வந்தால் பெயரும், புகழும் ஏற்படும். 

Latest Videos

New year Rasi Palan 2025: ராகு சனி கூட்டணி; குருவை பார்க்கும் சனி - எந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை?

எச்சரிக்கும் பெற்றோர்:
இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் வந்தால் நம்மை எச்சரிக்க வந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம். இறந்து போன அம்மா கனவில் வந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். சில நேரங்களில் நாமே இறந்து பாடையில் வைக்கப்பட்டது போல கனவு வந்தால் அதிகரிக்கும் என்று அர்த்தம்.

நல்ல செய்தி தேடி வரும்:
பொதுவாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். கனவில் இறந்தவர்கள் நம்மை ஆசிர்வதிப்பது போல வந்தால் நன்மைகள் அதிகரிக்குமாம். உயிரிழந்த உறவினர்களுடன் சிரித்து பேசுவது போல கனவு வந்தால் பெயரும் புகழும் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.  இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு வந்தால் பெரிய கண்டத்தில் இருந்து தப்புவீர்கள் என்று அர்த்தம். அதே நேரம் இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுதால் நல்லதல்ல. கோவிலில் அர்ச்சனைக்கு கொடுப்பது நல்லது. 

click me!