Drink water before eat: சாப்பிடும் முன் கைகளில் தண்ணீர் ஊற்றி குடிப்பது ஏன் தெரியுமா? சித்தர்கள் சொன்ன ரகசியம்

By Dhanalakshmi GFirst Published Jul 23, 2024, 2:39 PM IST
Highlights

உணவே மருந்தாக வாழ்ந்த காலம் போய் இன்றைக்கு மருந்தே உணவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் சாப்பிடும் முறையும் கூட நமது உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைகிறது. எப்படி சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிடக்கூடாது என்று நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர்.  நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம் என்று சொல்லி வைத்துள்ளனர். ஆனால் இன்றைக்கோ உணவுகளை அவசர கதியில் அள்ளி போட்டுக்கொள்கின்றனர். எப்படி சாப்பிட்டால் நமது ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று சித்தர்கள் எழுதி வைத்துள்ளதை படிக்கலாம்.

சித்தர்கள் சொன்னது என்ன?
சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும் மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் எழுதி வைத்துள்ளனர். அதன்படி நக்கி சாப்பிடுவது , சப்பி சாப்பிடுவது, கடித்து சாப்பிடுவது, உறிந்து சாப்பிடுவது என்று என்று 4 வகையாக பிரிக்கலாம்.
எந்த உணவை எப்படி சாப்பிடலாம் என்று ஒமுறை இருக்கிறது .

சுத்தம் அவசியம்
நாம் பசித்த பின்னர் சாப்பிட வேண்டும். உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்களை குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும். பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள்.

கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன்
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் . இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது. நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது. இந்த சுடு  ஜடாரக்னி தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் இதற்கு ஈரம் தேவை . குளிர்ச்சி தேவை இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்.  லிங்கம் தலைகீழாக இருக்கும் உள்நாக்கு நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் காய்ச்சல் ஏற்படும். எனவேதான் காய்ச்சல் எந்த அளவிற்கு இருக்கிறது என்று கழுத்தில் கை வைத்து பார்த்தனர்.

வறட்சி ஏற்படாது
நாம் உணவு உண்ணும் பொழுது இடையில் தண்ணீர் குடிக்கக்கூடாது. தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நனையும் பிறகு சாப்பிடும் போது நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது. சாப்பிட்டு முடித்த பிறகு அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும். எனவேதான்  கால்களை மடக்கி கைகளில் நீர் ஊற்றி இறைவன் நாமம் சொல்லி உறிஞ்சி குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்

ஆடி கிருத்திகை 2024 எப்போது..? இந்த நாள் முருகனுக்கு ஏன் சிறப்பு ..?

என்ன நன்மை:
இன்றைக்கு பலரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். நாம் கால்களை மடக்கி தரையில் அமர்ந்தால் கல்லீரல் மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும். சர்க்கரை நோய் வராது. உள்ளங்கையில் நீர் உற்றி  உறிஞ்சி குடிப்பதன் மூலம் பல நன்மைகள் நடைபெறும்.

கைகளும் வயிறும்:
தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பி சாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம். பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும். இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது.

மருந்து எப்படி சாப்பிட வேண்டும்:
இதை அகஸ்தியர் நாடியில் எழுதி வைத்துள்ளனர். எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும் என்று சொல்கிறார். மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர்,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து சாப்பிட வேண்டும் சொல்லி உள்ளார்கள். கோவில்களில் கொடுக்கும் தீர்த்தத்தை பலரும் உள்ளங்கைகளில் வாங்கி உறிஞ்சி குடிப்பதன் காரணமும் இதுதான்.

Latest Videos

KAILASA's Nithyananda Location Revealed: நாட்டிற்கே தண்ணீர் காட்டிய நித்தி; கைலாசா இருக்கும் இடம் அறிவிப்பு

நோய்கள் நீங்கும்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் கைகளை வைத்து நோய்களை அறியலாம். நகம்,விரலில் உள்ள மச்சம் அதில் உள்ள இடைவெளி போன்ற அடையாளங்களை வைத்து நோய்களை அறியலாம். மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம் அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீட்சை. நம்முடைய மகான்கள், சித்தர்கள் இதைத்தான் செய்தனர். எனவே சித்தர்கள் சொன்ன வழியில் நாம் சாப்பிட்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்

click me!