ஆடி கிருத்திகை 2024 எப்போது..? இந்த நாள் முருகனுக்கு ஏன் சிறப்பு ..?

By Kalai Selvi  |  First Published Jul 22, 2024, 4:10 PM IST

Aadi Krithigai 2024 in Tamil  : ஆடி கிருத்திகை ஏன் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதன் சிறப்புகள் என்ன? இந்த ஆண்டு ஆடி கிருத்திகை எப்போது என்று இங்கு பார்க்கலாம்.


ஆடி கார்த்திகை என்பது தமிழ் மாதமான ஆடியில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இந்நாள் முருகப்பெருமானை கொண்டாடுவதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருகன் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் ஆவார். அவர் தைரியம் மற்றும் ஞானத்திற்காக மதிக்கப்படுகிறார். 

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் ஏன் முக்கியமானது?:
கிருத்திகை நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரமாகும். தமிழ் மாதமான ஆடியில் இந்த நட்சத்திரத்தால் ஆளப்படும் நாள் ஆடி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்தர நட்சத்திரம் என்பதால் இந்நாள் மிகவும் மங்களகரமானதாகவும், முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள முருகன் கோவிலில் இந்நாளில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Tap to resize

Latest Videos

undefined

ஆடி கிருத்திகையின் முக்கியத்துவம்:
தமிழ் மாதமான ஆடி மாதம் முழுவதும் தெய்வங்களுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் வழிபாடுகள் செய்ய ஏற்ற மாதமாகும். சூரியன் வடக்கிலிருந்து தெற்கு அரைக்கோளத்திற்கு மாறுவது இம்மாதத்தில் தான். ஆடி கிருத்திகை முருகப்பெருமானின் சக்தி நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் ஆறுபடை வீடு வீடுகளில் அவருக்கு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படும்.

ஆடி கிருத்திகையின் பின்னணி என்ன?
புராணங்கள் படி, சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து ஆறு சுடர்களாக முருகப்பெருமாள் பிறந்தார்.  அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைகள் வளர்த்தனர். குழந்தைகள் இளம் பருவம் அடைந்ததும், பார்வதி தேவி அவர்களை கிருத்திகைகளிடமிருந்து எடுத்து ஆறுமுகங்களைக் கொண்ட ஒரு பையனாக இணைத்து முருகப்பெருமானுக்கு பெயர் சூட்டினார். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று சிவபெருமானும், பார்வதியும் கிருத்திகைகளுக்கு வரம் அளித்தனர். இதனால்தான் முருகப்பெருமானுக்கு கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றது.

ஆடி கிருத்திகை கொண்டாட்டம்:

  • ஆடி கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் இருக்கும் முருகன் சிலைக்கு பால் தேன், சந்தனம் மற்றும் புனித நீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். அதுபோல பூக்கள், புதிய ஆடைகள் மற்றும் நகைகள் லட்சுமி தேவி அலங்கரிப்பார்கள்.
  • மேலும் இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மட்டும் சடங்குகள் நடைபெறுவதால் அவற்றில் பங்கேற்பதற்காக மக்கள் செல்வார்கள்.
  • ஆடி கிருத்திகை நாளில் மிகவும் விசேஷமானது ஒன்று காவடி ஆட்டம். காவடிகளை தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து கோவிலுக்கு செல்வார்கள். மேலும் பல பக்தர்கள் இந்நாளில் விரதம் அனுசரிப்பார்கள்.
  • ஆடி கார்த்திகை அன்று பக்தர்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்று முருகனின் படத்துக்கு அரளிப்பூ சமர்ப்பித்து வழிபடுவார்கள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வார்கள்.

இந்த 2024 ஆண்டு ஆடி கிருத்திகை எப்போது?
இந்த 2024 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை ஜூலை 29ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வருகிறது.

click me!