மதுரை அழகர் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே, 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், தென் வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாகவும் அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் திகழ்ந்து வருகின்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பல்வேறு உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சித்திரை மாதம் வைகை ஆற்றில் தங்ககுதிரை வாகனத்தில் ஶ்ரீகள்ளழகர் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், ஆடி மாத பௌர்ணமியொட்டி நடைபெறும் திருத் தேரோட்டமும் முக்கிய திருவிழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
undefined
இதனையொட்டி, இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை முதல் தென்மாவட்ட ரயில்கள் சென்னைக்குள் நுழைய தடை; ரயில் சேவையில் முக்கிய மாற்றங்கள்
தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைப்பெறுவதைத்யொட்டி, உற்சவ மூர்த்தியான ஶ்ரீ கள்ளழகர் மற்றும் ஶ்ரீதேவி,பூதேவியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் வண்ண திரைத்துணிகளால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் ஶ்ரீகள்ளழகர் ஶ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் சமேதராக எழுந்தருளப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, கிராம நாட்டார்கள் மற்றும் உபயதாரர்கள் வெள்ளை வீசியதைத் தொடர்ந்து, கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை முட்டும் வகையில் கோஷத்துடன், 120 அடி நீளம் கொண்ட திருத்தேர் வடத்தை பிடித்து தேரை இழுக்க தொடங்கினர். இந்த, திருத்தேரோட்டதையொட்டி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Madurai News: மதுரையில் மாமியாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டு நாடகமாடிய மருமகள்! சிக்கியது எப்படி?
மேலும், இந்த ஆடிப் பெருந்திருவிழாவில், தென் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொள்ளும் நிலையில், தங்களது பகுதியில் மழை பொழிந்து, விவசாயம் செழிக்க வேண்டி, தாங்கள் விளைவித்த நெல், உள்ளிட்ட பல்வேறு தானியங்களை திருக்கோவிலில் செலுத்தி வழிபடுவர் என்பது குறிப்பிடதக்கது.