Aadi Koozh Festival in Tamil : ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?

Published : Jul 20, 2024, 10:23 AM ISTUpdated : Jul 20, 2024, 12:50 PM IST
Aadi Koozh Festival in Tamil : ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?

சுருக்கம்

Aadi Koozh Festival in Tamilஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு செய்கிறார்கள். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

ஆடி மாதம் என்பது தமிழ் மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதம் ஆகும். மேலும், இம்மாதம் முழுவதும் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்தப்படும். ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி தபசு என பல விசேஷங்கள் இந்த மாதத்தில் கொண்டாடப்படும்.  இம்மாதம் அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, மஞ்சள் நீர் வைத்து வழிபாடு செய்யப்படும். ஆனால், ஆடி மாதத்தில் ஏன் அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா? இது குறித்து விரிவாக இங்கு நாம் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செய்யும் சில விஷயங்களை எந்தவித காரணமும் தெரியாமல் செய்கிறோம். ஆனால், நம்முடைய முன்னோர்கள் அப்படி அல்ல அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னும் ஒரு காரணம் மறைந்திருக்கும். அவற்றில் ஒன்றுதான் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது. பொதுவாகவே, ஆடி மாதம் காற்று மழையும் கலந்து இருக்கும். இந்த மாதத்தில் தான் மழை தொடங்க ஆரம்பிக்கும். இதனால் பல நோய்கள் நம்மை தாக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த வேப்பிலையும், மஞ்சள் நீரும் உண்டு வழிபாட்டில் இடம்பெறுகின்றது.

இதையும் படிங்க:  Aadi Month | ஆடி மாசம் தொடங்கியாச்சு! மதுரை அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் டூர் போலாமா? முழு தகவல் இதோ..!

அதுபோலவே, ஆடி மாதம் காற்று பலமாக வீசுவதால், வீடு முழுவதும் புழுதியாக இருக்கும். இதனால்தான் இந்த மாதத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நம்மோடு முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தி இருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தவிர, ஆடி மாத பிரசாதங்களில் மிகவும் முக்கியமானது கூழ் தான். இது உடலையும், வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டில் பயன்படுத்தும் கூழ் குடித்தால் பலவிதமான நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். எப்படியெனில், ஆடி மாதத்தை தட்பவெப்ப நிலை காரணமாக இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். எனவே, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதால் இந்த நேரத்தில் கம்பு மற்றும் கேழ்வரகு கொண்டு கூழ் செய்து குடிப்பது நல்லது.

இதையும் படிங்க:  ஆடி முதல் வெள்ளி 2024: அம்மனை எப்படி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்?!

எனவே, ஆடி மாதத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு செய்வது வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். அது மட்டும் இன்றி இந்த கூழை ஏழை எளியோருக்கு வழங்கினால் அம்மனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!
Spiritual: இனி முரட்டு சிங்கிள்களே இருக்க மாட்டாங்க...! திருமண தடையை போக்கும் எளிய வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்