Aadi Velli: ஆடி முதல் வெள்ளி; சமயபுரத்தில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை மனம் உருகி வழிபடும் பக்தர்கள்

By Velmurugan s  |  First Published Jul 19, 2024, 2:47 PM IST

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர்.


ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவார்கள். அதுவும் ஆடி வெள்ளி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். ஆடி முதல் வெள்ளிக் கிழமையான இன்று சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.   

Pa. Ranjith: திமுகவிற்கு அடுத்த ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன்.. இது ஒரு எச்சரிக்கை.. பா.ரஞ்சித்!

மேலும் மொட்டை அடித்தும், தீச்சட்டி ஏந்தியும்,  துலா பாரம் நேர்த்திக்கடன் செலுத்தியும், அழகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.  ஆடி மாதம் என்பதால் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் கூழ், பானக்கம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.  மேலும் அதிகாலையில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள்,  தன்னாலவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாப்பாடு எப்படி இருக்கு? அம்மா உணவகத்தில் முதல்வர் திடீர் விசிட்! ஆய்வுக்கு பின் அதிரடி உத்தரவு போட்ட ஸ்டாலின்

இதேபோன்று பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில், துறையூர் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் பெண்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

click me!