Thulasi, Maruthani in Dreams: கனவில் வரும் துளசி செடி.. நல்லதா? கெட்டதா? கனவு சாஸ்திரம் சொல்லும் பலன் இதுதான்!

By Asianet Tamil  |  First Published Jul 22, 2024, 11:58 AM IST

உறக்கத்தில் சிலருக்கு அர்த்தமில்லாத குழப்பமான கனவுகள் வரும் சில நேரங்களில் பயமுறுத்தும் வகையில் அகோரமான கனவுகள் கூட வரலாம். சிலர் ஏதோ ஒரு இடத்தில் தொலைந்து போவது போலவும் தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பது போலவும் கனவு காண்பார்கள். சிலருக்கோ மரங்கள், பூக்கள், செடி கொடிகள் கனவில் அடிக்கடி வந்து போகும். பொதுவாக தெய்வீக மூலிகை எனப்படும் துளசி செடி கனவில் வருவது நல்லதா? மரங்கள் செடி கொடிகள் வந்தால் என்ன பலன் என்று கனவு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.


கனவுகள்:
நம்முடைய ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளாக  வெளிப்படும் என்று சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியல் நிபுணர் கூறியுள்ளார். சிலருக்கு வீட்டில் தோட்டம் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு அது தொடர்பான செய்திகளே சமூக வலைத்தளங்களில் அதிகம் கண்ணில் படும் அதுபோலவே நமது ஆழ்மன எண்ணங்கள் சில நேரங்களில் கனவுகளாக வெளிப்படும்.

சுப கனவுகள்:
சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சாலையோர புளியமரங்கள் நன்றாக பூத்து காய்த்து தொங்குவது போல கனவு காண்பது அதிர்ஷ்டத்தின் அடையாளம். அந்த கனவின் மூலம் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தம்.

மலர்கள்:
பூக்கள் பூத்து குலுங்கும் தோட்டத்தில் நாம் வாக்கிங் செல்வது போல கனவு வந்தால் நமது வம்சம் விருத்தியடைய போகிறது என்று அர்த்தம். திருமணமான தம்பதியினருக்கு குழந்தைபேறு உண்டாகப்போகிறது என்று அர்த்தம். செடி மற்றும் மரத்தில் இருக்கும் பூக்களையோ பழங்களையோ பறிப்பது போல உங்கள் கனவில் கண்டால், நல்ல அறிகுறியாகும். இது சுப கனவுதான். பூச்செண்டு ஒன்றை பரிசாக கொடுப்பது போல கனவு வந்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.

KAILASA's Nithyananda Location Revealed: நாட்டிற்கே தண்ணீர் காட்டிய நித்தி; கைலாசா இருக்கும் இடம் அறிவிப்பு

துளசி, மருதாணி
கனவில் துளசி, மருதாணி செடிகள் வந்து போகும். மருதாணியை அரைத்து பூசுவது போல கைகள் சிவந்திருப்பது போல கனவு வரும். இதன் மூலம் நமக்கு உணர்த்துவது நம்முடைய உடலில் இருந்த நீண்ட நாள் நோய்கள் காணாமல் போகப்போகிறது என்று அர்த்தமாகும். துளசி செடிகள் கனவில் வந்தால் பெருமாளின் ஆசியும் குல தெய்வத்தின் ஆசியும் நமக்கு கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

வளர்ச்சி தரும் கனவுகள்
வீட்டு தோட்டத்தில் உள்ள  மரத்திலோ, வனத்தில் உள்ள மரத்திலோ ஏறுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம். மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு மிக பெரிய நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம். தோட்டத்தில் செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.  முட்கள் நிறைந்த செடியில் உங்களின் துணி மாட்டி கொண்டது போல கனவு வந்தால், உங்களின் பிரச்சினைகள் விலகப்போகிறது என்று அர்த்தம். சப்பாத்திக்கள்ளி செடியை வெட்டி அகற்றுவதாக கண்டால் எதிரிகளின் தொல்லை விலகும்.

Latest Videos

ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழ்.. இனி வீட்டிலேயும் செய்யலாம்.. ரெசிபி இதோ!

திருமணம், குழந்தை பேறு
வீட்டில் வாழைமரம் குலைதள்ளி நிற்பதை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்தும்.
கனவில் மாமரம் காய்த்திருப்பதை கண்டால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கி சுப காரியம் நடைபெறப்போவதை உணர்த்துகிறது. பலா மரம் காய்த்திருப்பதை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சனைகள் விலகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். கனவில் அத்தி மரம் வந்தால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற போவதை குறிக்கும். கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்யும் தொழில் மேன்மை அடையும். அரச மரத்தை கனவில் கண்டால் அரசு வேலை தொடர்பான நல்ல செய்தியும் தேடி வரும்.  

கெட்ட கனவுகள்
உங்கள் கனவில் பட்டுப்போன மரத்தை கண்டால்,வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ ஏதோ விரும்பத்தகாத சோகம் நிகழப்போகிறது என்பதை உணர்த்துகிறது. உங்கள் அல்லது பிறரது தோப்பில் இலை, காய் மற்றும் கனிகளை பறிப்பது போல கனவில் வந்தால் நோய்கள் வரும். மரம் முறிந்து விழுவது போலவோ, வேரோடு சாய்வது போலவே கனவு வந்தாலோ, செடி கொடிகள் காய்ந்து பட்டுப்போவது போல வந்தால் கெட்ட சகுனம். தெரிந்த உறவினர்களின் மரண செய்தி வீடு தேடி வரும். கெட்ட கனவு கண்ட உடன் எழுந்து தண்ணீர் குடித்து விட்டு படுக்கலாம்.

click me!