மிதுன ராசிக்கு இந்த ஆண்டு குரோதி தமிழ் புத்தாண்டு பல வழிகளில் நன்மைகளை வாரி வழங்க போகிறது.
குரோத்தி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கவுள்ளது. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் ரிஷப ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதேசமயம், சனி பகவான் பாக்கிய ஸ்தானம், ராகு ஜீவன ஸ்தானம், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்யவுள்ளதால், இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட போகிறது மற்றும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்க போகிறது என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம் ராசி: இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு மிதுன ராசிக்கு சிறப்பானதாக அமையும். மேலும் இவர்களது வாழ்க்கையில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும். இவர்கள வீடு அல்லது மனை வாங்குவார்கள். அதுமட்டுமின்றி, புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. மேலும், நீண்ட நாட்களாக இருக்கும் உடல் நல பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்..சட்ட சிக்கலில் சிக்கி இருப்பவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக, எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு சரியான நேரத்தில் கிடைக்கும்.
திருமணம் கைக்கூடும்: பல நாட்களாக திருமணத்தில் தடை இருப்பதற்கு இந்த புத்தாண்டில் திருமண பாக்கியம் கைகூடும்.. அதுமட்டுமின்றி திருமணம் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சொத்துக்கள் வாங்குதல் அல்லது விற்பது தொடர்பான காரியங்கள் சுமுகமாக முடியும்.
பெண்கள்: இந்த தமிழ் புத்தாண்டில் பெண்கள் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு தோஷங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. எனவே,அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். குறிப்பாக, தாலி பாக்கியம் அதிகரிக்கும்.
மாணவர்கள்: இந்த தமிழ் புத்தாண்டு மாணவர்களுக்கு அற்புதமான மாற்றத்தை தரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், உங்களுக்கு படிப்புக்கான அமைப்பு சாதகமற்றதாக இருப்பதால், கூடுதல் நேரம் ஒதுக்கி படித்தால் வெற்றி கிடைக்கும். மேலும் புதிய உத்வேகத்துடன் கல்வி கற்றால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.
இதையும் படிங்க: Rasi Palan : தமிழ் புத்தாண்டு 2024 ... தொட்டதெல்லாம் வெற்றி தான்.. தயாராக இருங்கள் ரிஷப ராசிக்காரர்களே!!
அரசியல்: மிதுன ராசியில் இருப்பவர்கள் அரசியலில் இருந்தால் இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அரசியலில் பதவி உயர்வு மற்றும் நல்ல பெயரை பெற்றுத் தரும்.
கடன் பிரச்சினை நீங்கும்: பல நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு திடீர் வருமானம் அதிகரிக்கும் மற்றும் தீராத கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் பணப்பிரச்சினையில் சிக்கித் தவித்தவர்களுக்கு பொருளாதார நிலைமை நன்றாக அமையும். அதுபோல, வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளது.
இதையும் படிங்க: Mesham Rasi Palan : குரோதி தமிழ் புத்தாண்டு 2024: மேஷ ராசிக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்!
தொழில் மற்றும் வேலை: வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதுபோல, வெளிநாடு வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். மேலும் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவு அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D