Rasi Palan : தமிழ் புத்தாண்டு 2024 ... தொட்டதெல்லாம் வெற்றி தான்.. தயாராக இருங்கள் ரிஷப ராசிக்காரர்களே!!

By Kalai Selvi  |  First Published Apr 6, 2024, 11:15 AM IST

கிரகங்களின் மாற்றத்தால் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும்.. என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வருகிறது. இந்நிலையில், இந்த புத்தாண்டில் கிரகங்களின் மாற்றத்தால், பல ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும். அதுமட்டுமின்றி, புதன், சுக்கிரன் மற்றும் கேது 12 ராசிகளிலும் சஞ்சரிப்பார்கள். அதுபோல, குரோதி வருடம் இந்த ஆண்டு தான் பிறக்கிறது. அந்தவகையில், ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

ரிஷபம்: சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாகும். இந்நிலையில் இந்த ராசியில் ராகு லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பயணம் செய்வார்கள். மேலும் 12 ஆம் வீட்டில் இருந்து குரு பகவான் உங்கள் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார் சனி பகவான் ஆண்டின் இறுதியில் வருவார்.

Tap to resize

Latest Videos

இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லதாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் இந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் திறமைகள் மதிக்கப்படும். இதனால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்.   அதுமட்டுமின்றி, ஏதாவது ஒன்றில் கையெழுத்திட போகிறீர்கள் என்றால் கொஞ்சம் கவனம் தேவை. உங்களது முக்கியமான கோப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: Mesham Rasi Palan : குரோதி தமிழ் புத்தாண்டு 2024: மேஷ ராசிக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்!

வாழ்க்கைத் துணையுடன் சண்டை போட வேண்டாம். உங்களுக்கு செல்வங்கள் குவியும். பூர்வீக சொத்தில் லாபம் கிடைக்கும். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பெருமையை தேடி கொடுப்பார்கள். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் பிரச்சினைகள் வந்தால் மூன்றாம் நபரை அணுமதிக்க வேண்டாம். உங்களுக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதால் ஆறு குளம் ஏரிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: ஏப்ரல் 14 குரோதி தமிழ்ப் புத்தாண்டு.. ராகுவால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

தொழில்: நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.  அதுபோல, செய்யும் வேலையில்  அலட்சியமும் அவசரமும் இருக்கவே 
கூடாது. நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும், அதில் ஏற்றமும் வளர்ச்சியும் உண்டாகும்.

திருமணம் கைகூடும்: இந்த தமிழ் புத்தாண்டில் இந்த ராசிக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பிள்ளைகளின் உயர்கல்வி நல்ல விதமாக முடியும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் முயற்சித்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். சிலருக்கோ கல்வியில் தடை வரும். சவால்கள் வரும் ஆனால் அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாதிப்பீர்கள். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

பிரச்சனைகள்: சர்க்கரை நோய், மூட்டுத் தேய்மானம், கொழுப்பு அதிகரிப்பு, காது, மூக்கு, தொண்டை என இது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். ஆக, இந்த குரோதி தமிழ் புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதனைகள் மற்றும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!