இந்தாண்டு குரோதி தமிழ் புத்தாண்டு முதல் மேஷ ராசிக்கு சிறப்பானதாக அமைய வாய்ப்பு உள்ளது. மேலும் அற்புதமான பலன்கள் இவர்களுக்கு கிடைக்கப் போகிறது.
தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை. இந்த மாதத்தின் முதல் நாளில் தான் குரோதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று வருகிறது. இதனால் சிலது வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு குரோதி தமிழ் புத்தாண்டில் மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட போகின்றது மற்றும் எப்படிப்பட்ட பலன்கள் அவர்களுக்கு கிடைக்கப் போகின்றது என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: இந்த ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்களாம்.. உங்க ராசி என்ன?
மேஷம் ராசி : இந்த ஆண்டு குரோதி தமிழ் புத்தாண்டு முதல் இந்த ராசிக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். இன்னும் சொல்ல போனல் இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சுப பலன்களை கொண்டு வரும். ஏனெனில், இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும் மற்றும் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். எனவே, இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக மாறப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சாரம் : இந்த 3 ராசிகளுக்கு அதிஷ்டம் தான்! இதுல உங்க ராசி இருக்கா..?
தொழில் மற்றும் வேலை : வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். செய்யும் தொழில் விருத்தி அடையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் இதுவரை ஏற்பட்டு வந்த போட்டி மற்றும் சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.
கல்வி : படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு நீங்கள் படிப்பில் முன்னேற விரும்பினால், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். கல்வியில் மந்தமாக இருப்பவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமென்று விரும்பினால் அதிக முயற்சி செய்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கலைத்துறை : இந்த துறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதனால் அவர்கள் உயரத்தை அடைவர்கள்.
பெண்கள் : மேஷ ராசி பெண்களுக்கு இந்த குறத்தி தமிழ் புத்தாண்டு சாதகமான பலன்களை அள்ளி கொடுக்கும். பெண்கள் நகை வாங்குவதையும் பொருட்கள் மீது அதிக ஆசை வைப்பதையும் தவிர்ப்பது நல்லது.
அரசியல் : அரசியலில் இருப்பவர்களுக்கு இது சிறப்பான ஆண்டாக அமையும். இதனால் உங்களுக்கு பெயர், புகழ், பதவி, செல்வாக்கு கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D