திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. 3 மாதங்களுக்கு விஐபி சிபாரிசு கடிதங்கள் நிறுத்தம்.! தேவஸ்தானம் அதிரடி!

By vinoth kumar  |  First Published Apr 6, 2024, 2:17 PM IST

கடந்த மார்ச் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை 21.10 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இவர்களில் 7.86 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 42.85 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 1.01 கோடி லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. 


கோடை விடுமுறையையொட்டி திருமலை திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்கள்  கூட்டம் அதிகரித்து வருவதால் விஐபி சிபாரிசு கடிதங்கள் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் பக்தர்கள் நாள் கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்கி இருப்பதால் வரும் நாட்களில்  பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு செய்யவில்லையா? கவலை வேண்டாம்.. இலவசமாக தரிசனம் செய்ய சூப்பர் வழி!

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கோடை விடுமுறையையொட்டி திருமலை திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்கள்  கூட்டம் அதிகரித்து வருவதால் விஐபி சிபாரிசு கடிதங்களை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சாமானி மக்கள் அதிக எண்ணிக்கையிலும், அதிக நேரம் காத்திருக்காமலும் விரைந்து தரிசனம் செய்ய முடியும். அது மட்டுமல்ல, ssd (இலவச தரிசனம்) tocken களின் எண்ணிக்கையை 30,000 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாட வீதிகள், நாராயணகிரி பகுதிகளில் வெயிலை சமாளிக்க தரையில் கூல் பெயிண்ட்அடிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  Black Thread : காலில் கருப்பு கயிறு கட்டலாமா..? எந்த ராசிக்காரர்கள் கட்டினால் ஆபத்து..??

கடந்த மார்ச் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை 21.10 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இவர்களில் 7.86 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 42.85 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 1.01 கோடி லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ரூ.118.49 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

click me!