மாதந்தோறும் பௌர்ணமிகள் வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது.
பெருமாளுக்குரிய அற்புத மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, பௌர்ணமி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. மாதந்தோறும் பௌர்ணமிகள் வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் முன்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, செல்வ வளம் பெரும் என்பது நம்பிக்கை. இதனால் பலரும் பௌர்ணமி அன்று சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.
அந்த இந்த ஆண்டு புரட்டாசி மாத பௌர்ணமி செப்டம்பர் 28-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.46 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயாணம் தேவர்களுக்கு இரவு காலம் இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தில் வரும் நடுநிசியாகும். எனவே இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி என்பது அம்பிகையின் அருள் அதிகரிக்கும்.
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தப்டியே தியானமும் தவமும் செய்து, அன்னையின் ஆசியையும் அருளையும் பெறுவார்கள். பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாம, தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிகைக்கும் என்பது ஐதீகம். எனவே பௌர்ணமி தினத்தில் வீட்டில் இருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதாலும் தெய்வ அனுகிரகம் வீடுதேடி வரும்.
குபேரன் "செல்வத்தின்" கடவுளான கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேலும் பௌர்ணமி என்றாலே சிவனுக்கும், பார்வதிக்கும் தான் விசேஷமான நாள். எனவே பௌர்ணமி அன்று வீட்டு பூஜை அறையில் மாலையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை மனதார வேண்டி, இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள். முழு நிலவும் தெரியும் போது கொஞ்சம் பச்சரிசியை உள்ளங்ககியில் வைத்து கொண்டு சந்திர பகவானிடம் உங்கள் வேண்டுதல்களை கூறுங்கள்.
சிவன், பார்வதி, பெருமாள், லட்சுமி தேவியையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். குல தெய்வத்தையும் மனதில் நினைத்து சந்திர ஒளியில் சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். குறைந்தது 5 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை கூட நீங்கள் பிரார்த்தனை செய்யலாம். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும். செல்வ கடாட்சம் கிடைக்கும்.