ஒவ்வொரு ஆண்டு வளர்ந்து வரும் விநாயகர் சிலை.. அறிவியலுகே சவால்விடும் அற்புத கோயில் பற்றி தெரியுமா?

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.


முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயகரின் வணங்கிவிட்டு ஒரு வேலையை தொடங்கினால் அது எந்த தடையுமின்றி வெற்றிகரமாக நடக்கும் என்பது ஐதீகம். நாடு முழுவதும் பல்வேறு புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள் உள்ளன. ஆனால் இந்த பிரபல கோயில் உள்ள விநாயகர் சிலை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறது. ஆம். காணிப்பாக்கம் விநாயகர் கோயில் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள காணிப்பாக்கம் என்ற கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இந்த ஊரில் இந்த பகுதியில் காது கேளாத, வாய் பேசாத, பார்வையற்ற 3 சகோதர்கள் வாழந்து வந்துள்ளனர். ஒருமுறை அவர்கள் தங்கள் வறண்ட நிலத்திற்காக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிணறு தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருள், கிணற்றில் இருந்த பொருள் மீது தாக்கியது, அதில் இரத்தம் வெளியேறுவதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர்.. அந்த நேரத்தில் கிணற்றில் இருந்த தண்ணீர் எல்லாம் விரைவில் கருஞ்சிவப்பாக மாறியது. அதிர்ச்சியடைந்த சகோதரர்கள் இரத்தம் கலந்த கிணற்றுத் தண்ணீரைத் தொட்டவுடனேயே பரலோக ஆசீர்வாதத்தைப் பெற்றனர். மேலும் அவர்களின் உடல் குறைபாடுகளும் நீங்கிவிட்டது.

Latest Videos

இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால் சுற்றுவட்டாரங்களில் வசித்த மக்கள் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். அப்போது கிணற்றில் இருந்த விநாயகர் சிலையை அப்பகுதியினர் கண்டுபிடித்து, அதை பக்கத்து கோவிலுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற முயன்றனர். அந்த சிலை பெரிதாகி வருவதைக் கண்டு இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் அந்த சிலையின் முன் தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். விரைவில், அங்கு ஒரு கோவில் கட்டப்பட்டது. இக்கோயிலின் மையத்தில் உள்ள விநாயகப் பெருமான் சுயம்புவாகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. 

இந்த விநாயகர் வரசித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலை ஆண்டுதோறும் வளர்ந்து வருவதாகவும், கோயிலின் மற்ற அமைப்புகள் மாறாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் அறநிலையத் துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த கோயில் வருகிறது, அதன் புனித விவகாரங்களை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக அறக்கட்டளை குழு செயல்பட்டு வருகிறது. 

திருப்பதி ஏழுமலையானை நிதானமாக தரிசிக்கலாம்.. அதுவும் வெகு அருகிலேயே..! பலருக்கும் தெரியாத ரகசியம்..

ஒவ்வொரு ஆண்டும், 21 நாட்களைக் கொண்ட வருடாந்திர பிரம்மோத்ஸவ திருவிழா கோலகலாமக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயக சதுர்த்தி நாளில் தொடங்கும் இந்த விழாக்கள் பல்வேறு வாகனங்களில் தெய்வீக விநாயகர் சிலை ஊர்வலத்தைக் காணும், இந்த புனிதமான காட்சியில் பங்கேற்க நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கிறது.

விநாயகர் கிணற்றின் புராணக்கதை இதயங்களையும் மனதையும் வசீகரித்துக்கொண்டே இருப்பதால், அது அதிசயத்திற்கும் தெய்வீகத்திற்கும் ஒரு சான்றாக நிற்கிறது, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து விநாயகரின் அருளை பெற்று செல்கின்றனர்.

click me!