3 நாள் தொடர்மழை; அண்ணாமலையார் கோவில் கோபுர சிலை உடைந்து கீழே விழுந்ததால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Sep 26, 2023, 4:36 PM IST

திருவண்ணாமலை மலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அண்ணாமலையார் கோவில் கோபுரத்தில் உள்ள சிலை உடைந்து கீழே விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயில். சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நான்கு ராஜகோபுரங்கள் மற்றும் கட்டை கோபுரங்கள் என அழைக்கப்படும் ஐந்து சிறிய கோபுரங்களுடன் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட காலகட்டத்தில் இந்த திருக்கோவில் படிப்படியாக கட்டப்பட்டது.

Latest Videos

குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு பகுதியில் அம்மணி அம்மாள் கோபுரம் அமைந்துள்ளது. சுமார் 17ம் நூற்றாண்டில் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த கோபுரம் 171 அடி உயரம் கொண்டது. அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தின் வலது பகுதியில் பிரம்மதேவன்  சிலை அமைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திருவண்ணாமலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக இந்த சிலையின் மார்பு பகுதி உடைந்து இன்று காலையில் கீழே விழுந்துள்ளது. இந்த நிகழ்வு சிவ பக்தர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 1100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 2017ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

உங்களுக்கு மட்டும் தான் கருமாதி நடத்த தெரியுமா? கன்னடர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய தமிழர்கள்

கடந்த 2016ம் ஆண்டு அண்ணாமலையார் திருக்கோவிலின் ராஜகோபுரத்தில் அடித்தள விமானத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் வல்லுநர் குழுக்களை கொண்டு சரி செய்தார்கள். இதனையடுத்து அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள பாவை சிலையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலும் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தில் உள்ள பிரம்மதேவன் சிலையின் மார்பு பகுதிகள் உடைந்து கீழே விழுந்ததால் பக்தர்களிடையே மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனியில் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர்

குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பல கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானமாக வரும் நிலையில் அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள கோபுரங்களில் உறுதி தன்மையை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வல்லுநர் குழுக்களை கொண்டு கோவில் கோபுரங்களின் உறுதி தன்மையையும் கோபுரங்களில் அமைந்துள்ள சிலைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

click me!