அறுகம்புல் வாஸ்து: வீட்டில் எந்த திசையில் அறுகம்புல்லை நட்டு வளர்க்கலாம்?

By Dinesh TG  |  First Published Nov 30, 2022, 2:28 PM IST

விநாயகப் பெருமான் இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும். அவருக்கு மிகவும் பிடித்த அறுகம்புல்லை வீட்டில் நட்டு வளர்த்தாலும், நமக்கு வேண்டிய காரியங்கள் கைக்கூடி வரும். எனினும், பலருக்கும் அறுகம்புல்லை எப்படி வளர்ப்பது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
 


விநாயகப் பெருமான் வழிபாட்டில் அறுகம்புல்லுக்கு தனி மதிப்பு உண்டு. இந்த மூலிகை பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதனால் அறுகம்புல்லை தாராளமாக வீட்டில் வளர்க்கலாம். ஆனால் அதை வீட்டில் நட்டு வளர்க்கும் போது சில வாஸ்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் உரிய இடத்தில் வைத்தால் அது வீட்டில் செழிப்பை ஏற்படுத்தும். வீட்டில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானது. வாஸ்துவில் ஒவ்வொரு பொருளுக்கும் தனி இடம் இருப்பது போல் பல்வேறு வகையான தாவரங்களுக்கும் இடம் உண்டு. வீட்டில் நடப்பட்ட ஒரு துளசி செடி வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. அதேபோன்று மணி பிளாண்டு என்கிற தாவரம் செழிப்பைப் பொழிகிறது. அந்த வரிசையில் வீட்டில் அறுகம்புல்லை வளர்ப்பதிலும் இந்த வாஸ்து சாஸ்திரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அறுகம்புல்லை எங்கு வளர்க்கலாம்?

Tap to resize

Latest Videos

வாஸ்துவில் இந்த புல்லை நடுவதற்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகள் உள்ளன. உங்கள் வீட்டில் இந்த புல்லை நடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அறையின் கிழக்கு அல்லது வடக்கு மூலையில் புல்லை நடுவது முக்கியம். இந்த செடியை தவறுதலாக தெற்கு திசையில் வைக்க கூடாது. அது இழப்பை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின்படி அறுகம்புல்லை ஏதேனும் தவறான இடத்தில் வைத்தால், அது வீட்டில் அமைதியின்மையை உருவாக்கும். இந்த புல்லை கிழக்கு அல்லது வடக்கு திசையில் நட்டால், அதற்கு சரியான வெளிச்சம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீர் எப்போது ஊற்ற வேண்டும்?

உங்கள் வீட்டில் இருக்கும் அறுகம்புல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் கொடுப்பது அவசியம். இந்த புல்லை நாம் எப்போதும் உலர வைக்கக்கூடாது. அது வீட்டின் செழிப்புக்கு நல்லதல்ல. அதனால் எப்போதும் புல்லுக்கு தண்ணீர் தவிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த உதவிக்குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம், உங்களுடைய அறுகம்புல் செடி செழிப்பாக வளர்ந்து, உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த செடியின் இலைகள் பச்சை நிறத்தில் இருந்தால், வீடு மகிழ்ச்சியுடன் இருக்கும்.

வீட்டில் இந்த செடி இருந்தால் போதும், தொலைந்துபோன பணம் உங்களுக்கு கிடைக்கும்..!!

நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது

வாஸ்து கொள்கைகளின்படி அறுகம்புல்லுக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சக்தி உள்ளது. இந்த தாவரத்தின் சிறந்த விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். உங்கள் வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பு தேவை என்றால் வடகிழக்கு மூலையில் அறுகம்புல் செடியை நட்டு வளர்க்க வேண்டும். வீட்டின் கடவுள் அறையைச் சுற்றி நட்டால் நினைத்த காரியம் கைக்கூடும். 

எப்போதும் வீட்டில் அன்பும், நல்லிணக்கமும் அதிகரிக்க  வீட்டின் தென்கிழக்கு மூலையில் இந்த புல்லை நடவும். நீங்கள் காதல் அல்லது வாழ்க்கை துணையை தேடினாலும், அதே திசையில் அறுகம்புல்லை நடலாம். உங்கள் வாழ்க்கையில் உறவுகள் புதியதாக இணையும் போது அல்லது சந்திக்கும் போது, தொடர்ந்து தென்கிழக்கு திசையில் அறுகம்புல்லை நட்டு வந்தால், உறவுகளில் நீங்கள் நல்லிணக்கத்தை பேணுவீர்கள்.

click me!