இரண்டு பல்லிகளை ஒன்றாக பார்ப்பது நல்ல சகுனமா? அபசகுனமா?

By Dinesh TG  |  First Published Nov 27, 2022, 11:00 AM IST

எதிர்காலத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களை கொண்டு யூகிக்கலாம். வீட்டில் காணப்படும் பல்லிகளின் செயல்பாடுகளில் கூட பல்வேறு பலன்கள் கணிக்கப்படுகின்றன.  பல்லி சகுனம் பற்றி குறித்து நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். பல்லி உடலின் மீது விழக்கூடிய பகுதிகளை வைத்து சகுனம் கணிக்கப்படுகிறது. இதில் நல்ல விளைவுகளும் சொல்லப்படுகின்றன. அதேபோல தீய விளைவுகளும் கூறப்படுகின்றன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 


ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் நுழையும் போது கட்டிட உரிமையாளர் இறந்த அல்லது சேற்றுப் பல்லியைக் கண்டால், அந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்கள் உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. உணவின் போது பல்லி சத்தம் கேட்டால், சில நல்ல செய்திகள் அல்லது சுப பலன்கள் நம்மை வந்தடையும். 

அதேசமயத்தில் வீட்டுக்குள் பல்லிகள் தங்களுக்குள் சண்டை போடுவது நல்ல சகுனமாக பார்க்கப்படுவது கிடையாது. இதுபோன்று நடந்தால், வீட்டு உறுப்பினர்கள் தங்களுக்குள் அல்லது மற்றவர்களுடன் சண்டையிடுகிறார்கள் அல்லது கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது. ஆண் மற்றும் பெண் பல்லிகள் ஒன்றாகக் காணப்பட்டால், பழைய நண்பர் அல்லது அறிமுகமானவரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது. இப்போது பல்லி உடலின் பல்வேறு பகுதிகளில் விழுந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

Latest Videos

வாஸ்து தோஷம் ஏற்படாமல் வீடு கட்டுவது எப்படி?

  • ஆண்களின் தலை அல்லது வலது கை மற்றும் பெண்களின் இடது கை ஆகியவற்றில் பல்லி விழுவது அதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது.
  • பல்லி வலது கன்னத்தில் விழுந்தால் மகிழ்ச்சியைக் குறிக்கிறது,
  • இடது கன்னத்தில் அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால், ஆரோக்கியக் கோளாறு ஏற்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
  • தொப்புளில் பல்லி விழுந்தால் குழந்தை பிறப்பையும்,
  • வயிற்றில் விழுந்தால் உணவு தட்டப்பாட்டையும் குறிப்பதாக அமைகிறது.
  • மார்பு அல்லது காலில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று அர்த்தம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 
  • உழைக்கும் ஆண் அல்லது பெண்ணின் உடலில் உள்ள பல்லி வலது பக்கத்திலிருந்து எழுந்து இடது பக்கத்திலிருந்து இறங்கினால், அவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • பல்லி உடலின் இடது பக்கத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் விழுந்தால், அது அசுப பலனைத் தருவதாக அமைகிறது.
  • எள், நெய், தங்கம் போன்றவற்றை தானம் செய்வதால், பல்லி விழுவதால் ஏற்படும் அபசகுணங்கள் நீங்குகின்றன.
  • அதுமட்டுமின்றி, மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து, பஞ்ச கவ்யத்தை உட்கொள்வதாலும் பல்லி தோஷம் நீங்குவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
     
click me!