ஜவ்வாது பவுடர் என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்- அதன் மகிமையே வேறு..!!

By Dinesh TGFirst Published Nov 25, 2022, 1:04 PM IST
Highlights

தமிழ் சமுதாயத்தோடு மிகுந்த தொடர்புடையது ஜவ்வாது. அதை பயன்படுத்தும் இடங்கள் மங்களகரமாகவும் தெய்வீகமாகவும் இருக்கும். வாசனை திரவியமான ஜவ்வாது குறித்து அறிந்திராத பல முக்கிய தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
 

மனித உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வாசனை திரவியங்கள் பல உண்டு. ஆனால் முந்தைய காலக்கட்டத்தில் நம்முடைய முன்னோர்கள் பலர் ஜவ்வாது பொடியை வாசனை திரவியமாக பயன்படுத்தி வந்தனர். வெறும் வாசனை பொருளாக மட்டுமில்லாமல், பல்வேறு நன்மைகள் ஜவ்வாதுவில் இடம்பெற்றுள்ளன. சந்தனக் கட்டை, ஒருசில மூலிகைகள் மற்றும் நறுமணம் கொண்ட மலர்கள் வைத்து ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. கோயில்களில் மூலவர் தெய்வங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மூலவர் வாயிலாக பக்தர்களுக்கு கிடைக்கும் இறையாற்றல் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. அதுதான் நேர்மறையான ஆற்றலாக பக்தர்களுக்கு கிடைக்கிறது. இதுதவிர, ஜவ்வாது மூலம் கிடைக்கும் மேலும் பல்வேறு நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது

கோயில்களில் ஜவ்வாது பயன்படுத்துவதால் வெறும் நறுமணம் சூழ்வது மட்டுமில்லாமல், துஷ்ட சக்திகளும் விலகி நிற்கின்றன. புனுகுடன் சேர்ந்து ஜவ்வாது பயன்படுத்துவதால், தெய்வீகம் கோயில் முழுக்க நிறைந்திருக்கும். அந்த வகையில், இதை வீடுகளிலும் பயன்படுத்தும் போது வீடு முழுக்க தெய்வீகம் நிறைந்திருக்கும். வாசனை திரவியத்துக்கு பதிலாக, தனிநபர்களும் ஜவ்வாது பயன்படுத்தலாம். அப்படி செய்யும் போது, நம்மையும் துஷ்ட சக்திகள் அண்டுவது கிடையாது.

கடவுள் லட்சுமியின் அம்சம் கிடைக்கிறது

நல்ல நறுமணங்களில் கடவுள் லட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோயில்களில் பயன்படுத்தும் போது இறையாற்றலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதையே நமது வீடுகளிலும், பூஜை அறைகளிலும் பயன்படுத்தும் போது கடவுள் லட்சுமியின் அம்சம் நமது இல்லங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் வீடுகளில் செழிப்பு இருக்கும், இன்பம் அதிகரிக்கும்.

ஜவ்வாது பயன்படுத்தும் முறை

நாட்டு மருந்து கடைகளில் இன்றும் ஜவ்வாது விற்பனை செய்யப்படுகிறது. இது பேஸ்டு வடிவிலும் பொடியாகவும் கிடைக்கிறது. அதை வாங்கி வந்து, உங்கள் வீடுகளில் இருக்கும் சாமிப் படங்கள் மீது தடவலாம். பேஸ்ட்டாக கிடைத்தால், தண்ணீரில் கலந்து பூஜை அறையில் தெளிக்கலாம். அதேபோன்று சந்தனப் பொட்டு வைக்கும் போது, அதில் சிறுதளவு ஜவ்வாது கலக்கலாம். அப்போது சந்தனப் பொட்டு வைக்கும் போது, நம்மைச் சுற்றி நறுமணம் கமழும்.

வாஸ்து தோஷம் ஏற்படாமல் வீடு கட்டுவது எப்படி?

ஜவ்வாது கொண்டு பூஜை செய்யலாம்

கோயில்களில் கடவுளுக்கு வழங்கப்படும் அர்ச்சனை தட்டில் தேங்காய், பூ, வாழைப் பழத்துடன் ஜவ்வாது டப்பாவையும் வழங்கலாம். லிங்க வடிவிலான சிவன் கோயில்களுக்கு பூஜைப் பொருட்களுடன் ஜவ்வாது கொடுக்கலாம். தொடர்ந்து 9 வாரம் இப்படிச் செய்தால் தொழில் வளர்ச்சி அடையும், வியாபாரம் மந்தமாக இருந்தால் சூடு பிடிக்கும். அதேபோன்று சிவன் கோயில்களில் இருக்கும் கால பைரவருக்கும் ஜவ்வாது கொண்டு பூஜை செய்யலாம். இதனால் வேலைவாய்ப்பை வேண்டுவோர், புதிய வேலை வாய்ப்பை பெற விரும்புவோருக்கு பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்கும் ஜவ்வாது வைக்கலாம்

குழந்தைகள் பயன்படுத்தும் உடைகளின் ஓரத்தில் சிறிதளவு ஜவ்வாதை தேய்த்துவிடலாம். இதனால் கண் திருஷ்டி குழந்தைகள் மீது விழாது, அவர்களை துஷ்ட சக்திகள் அண்டாது. மேலும் குழந்தைகளைச் சுற்றி நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இறையாற்றல் அதிகளவில் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

click me!