வீட்டில் இந்த செடி இருந்தால் போதும், தொலைந்துபோன பணம் உங்களுக்கு கிடைக்கும்..!!

By Dinesh TG  |  First Published Nov 27, 2022, 10:03 AM IST

பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளும் வெளியிலும் செடிகளை நட்டு வளர்க்க பெரிதும் விரும்புகின்றனர். அதன்மூலம் உங்களுடைய வாழ்க்கைக்கு அதிஷ்டமும் செல்வமும் வந்து சேருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
 


தாவரங்கள் எப்போதுமே மனித குலத்துக்கு நன்மை செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. பச்சைப் பசேல் என்று இருக்கும் இடத்தை பார்க்கும் போது மனதுக்குள் ஒருவித நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அதை தங்களுடைய வீடுகளுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் பலரும் செடி வளர்ப்பில் கவனம் செலுத்துகின்றனர். தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர். வீட்டைச் சுற்றி மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதாக அவர்கள் நம்புகின்றனர். இதனால் வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் குறைவதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சில மரங்கள் மற்றும் செடிகளை நடுவது நல்ல பணம் அல்லது உடல்நல ஆரோக்கியத்துக்கு வழிவகை செய்வதாக அமைகிறது. அந்தவகையில் நம்முடைய வாழ்க்கைக்கு அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் சேர்க்கும் தாவரங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

முல்லை

Tap to resize

Latest Videos

வாஸ்து சாஸ்திரத்தின்படி முல்லைக் கொடியை நடுவது வீட்டுக்கு அதிர்ஷ்டமும் ஆற்றலும் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதை வீட்டின் வடக்கிழக்கு மூலையில் நடவு செய்ய வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வீட்டில் வசிப்பவரில் யாருக்கேனும் ராகு தோஷம் இருந்தால், அது நீங்கு பணம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

கறிவேப்பிலை

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் கறிவேப்பிலையை நட்டு வளர்த்து வருவதன் மூலம் நல்லது நடக்கும். இதற்கும் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அதன் இலைகளில் சிலவற்றை விநாயகருக்கு அர்ப்பணிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளைப் பெறுவதோடு இழந்த செல்வமும் உங்களை வந்து சேரும்.

பாம்பு கற்றாழை 

ஆங்கிலத்தில் இதற்கு ஸ்நேக் பிளாண்டு என்று பெயர். அதையே நாம் தமிழ்ப்படுத்தி பாம்பு கற்றாழை என்று குறிப்பிடுகிறோம். இது அடிப்படையில் ஒரு மூலிகைச் செடியாகும். இதனுடைய தாயகம் இந்தோனேஷியா என்று சொல்லப்படுகிறது. அங்கு இதை அழகுக்காக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவிலும் ஆஃப்ரிக்காவிலும் இது பெருமளவு காணப்படுகிறது. இந்த செடியை வளர்ப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. மேலும் இது வாஸ்து சாஸ்திரத்தில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படக்கூடிய செடி என்பதால், பாம்பு கற்றாழையை படுக்கையறையில் வைக்கலாம்.

வாஸ்து தோஷம் ஏற்படாமல் வீடு கட்டுவது எப்படி?

மணி பிளாண்டு

வீட்டுக்குள் செல்வத்தை சேர்க்கும் செடி என்பதால் இதை மணி பிளாண்டு என்று சொல்லப்படுகிறது. இது கொடி வகையைச் சேர்ந்தது. மணி பிளாண்டின் கிளை தரையை தொடக்கூடாது. அதனால் எப்போதும், ஒரு பெரிய குச்சையை நட்டுவைத்திடுங்கள். அதை பிடித்தவாறு மணி பிளாண்டு வளர்ந்து வரும். வீட்டின் பிரதான வாசலில் பணச் செடியை வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

மூங்கில் செடி

ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் கொண்டுவருவது தான் மூங்கில் செடி. இதை வீட்டின் உட்பகுதியில் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைக்கப்பட வேண்டும். மேலும் அலுவலகத்திலும் இதை வைக்கலாம். இந்த செடியில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான தாவரங்கள் இருப்பது இன்னும் சிறந்தது. மூன்று தண்டுகள் கொண்ட நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தைக் குறிக்கின்றன. ஐந்து தண்டுகள் கொண்ட செடி செல்வத்தைக் குறிக்கின்றன. ஏழு தண்டுகள் கொண்ட செடி முன்னேற்றத்தை குறிக்கின்றன. 21-தண்டுகள் கொண்ட செடியானது அதிசக்தியின் அம்சத்தை குறிக்கிறது.

click me!