ஐப்பசி பௌர்ணமி அன்று கடைசி சந்திர கிரகணம்; திருப்பதி பழனி கோவிலில் பூஜை நேரத்தில் மாற்றம்..!

By Kalai Selvi  |  First Published Oct 19, 2023, 7:34 PM IST

இந்த ஆண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி நாளில் வருவதால் திருப்பதி, பழனி கோயில்களில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.


பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதே சந்திர கிரகணம் எனப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு கடைசி சந்திர கிரகணம் இம்மாதம் 28ஆம் தேதி நள்ளிரவில் நடக்க உள்ளது. இதனால் கிரகணம் நிகழும் சமயத்தில், 5 மணி நேரத்திற்கு முன்பு கோவில்களில் கதவு அடைக்கப்படும்.

Tap to resize

Latest Videos

திருப்பதி ஏழுமலையான் கோயில்:
இந்நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். அதாவது, 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையாம் கோயிலின் கதவுகள் மூடப்படும். பின் 29ஆம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும். மேலும் சந்திர கிரகணமானது, 29ஆம் ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடைகிறது.

இதையும் படிங்க:  Lunar Eclipse 2023: சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுவிவரம்...

மேலும் சந்திர கிரகணத்தால் கோயில்களின் கதவுகள் 8 மணி நேரம் மூடப்பட்டிருப்பதால், 28 ஆம் தேதி நடக்கும் சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

பழனி முருகன் கோவில்:
அதுபோல் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில், சந்திர கிரகணத்தால், 28ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். பின் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  சந்திர கிரகணம் 2023: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும்!! ஏன் அப்படி சொல்றாங்க தெரியுமா?

கிரிவலம் செல்லலாமா?
இந்த சந்திர கிரகணம் நிகழ்வானது ஐப்பசி பௌர்ணமி அன்று வருகிறது இதனால் கிரிவலம் செல்லலாமா? செல்லக்கூடாதா? என்று பெரும்பாலானோர் குழப்பத்தில் இருக்கின்றனர். கிரகணம் முடிந்த பின் குளித்து முடித்துவிட்டு பின்னர் கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்தினர் சார்பில் வெளியிடப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கிரிவலம் செல்ல உகந்த நேரம்:
சந்திர கிரகணம் அக்டோபர் 28-ம் தேதி வருகிறது. அன்றுதான் பௌர்ணமி வருகிறது. எனவே பக்தர்கள் கிரிவலத்தை, அக்டோபர் 28ஆம் சனிக்கிழமை அதிகாலை 04.17 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.53 மணிக்குள் முடிக்க வேண்டும்.

click me!