வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச் செய்யும் பொருட்கள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே நம்முடைய வீட்டில் செல்வம் நிலத்திற்க வேண்டும் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்று தான் நாம் விரும்புவோம். இவை நம் வீட்டில் தங்க வேண்டுமென்றால், நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்ய வேண்டும். நாம் சிலருடைய வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டு மிகவும் அழகாக பராமரித்து வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுடைய வீட்டில் அலங்கோலமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக தேவையில்லாத பொருட்களை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருப்பார்கள்.
நாம் நம்முடைய வீட்டை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் சூழாது. ஒரு விலை வீட்டை அழகுலகமாக அலங்கோலமாக வைத்தால் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதால், எதிர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும். அந்தவகையில், வீட்டில் எதை வைத்திருக்கலாம், வைத்திருக்கக் கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இப்படி செய்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்:
வாசனை திரவியங்கள்:
நாம் ஒரு சில இடங்களுக்கு செல்லும்போது அங்கு வாசனை நிறைந்த பத்தி அல்லது அறைகளுக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இத்தகைய வாசனை பொருட்கள் ஆனது இயல்பாகவே நமக்குள் நல்ல எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.
இதையும் படிங்க: கவனம்.. உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தமாம்..
அதுபோல், தினமும் வீட்டு தலைவாசல் முன் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு, மாலை வேளையில் வீட்டில் தீபம் ஏற்றுவது இவை அனைத்தும் நேர்மறை ஆற்றலை வீட்டில் கொண்டு வரும். இதுமட்டுமின்றி நீங்கள் காலை எழுந்தது குளித்த பின் நறுமணம் தரும் ஊதுபத்திகளை வீட்டின் சமையலறை, ஹால் போன்ற பகுதிகளில் ஏற்றி வைக்கலாம். இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் எதிர்மறை நீங்கி, நேர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கும்.
இதையும் படிங்க: வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும் எளிய டிப்ஸ் இதோ..
வீட்டிற்குள் காலணிகளை அணிய வேண்டாம்:
நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் போது ஒரு போதும் காலணிகளை அணியாமல் இருப்பது நல்லது. ஏனெனில் நாம் வெறும் காலில் நடக்கும் போது நம் பாதமானது தரையில் பதியும் அப்போது எதிர்மறை ஆற்றல்களை பூமியானது ஈர்த்துக் கொள்வதால் நம் உடலில் இருக்கும் ஆற்றலில் சமநிலை உண்டாகும். மேலும் நாம் வெளியில் இருந்து வீட்டிற்குள் வரும்போது செருப்புகளை வீட்டின் தலை வாசலுக்கு வெளிப்புறமாக தான் கழற்ற வேண்டும். அதுமட்டும் இல்லாமல் கை, கால்களை நன்றாக கழுவி பின்னரே வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வீட்டில் வைக்கக் கூடாத பொருட்கள்:
உங்கள் வீடு அல்லது அலுவலகமாக இருந்தாலும் சரி அங்கு நீங்கள் உபயோகிக்காத அல்லது தேவையில்லாத பொருட்களை வைக்க வேண்டாம். ஏனெனில் அவை எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும். இப்படி நீங்கள் தேவையில்லாத பொருட்களை வீட்டில் வைத்தால் வீட்டில் ஓயாத சண்டை, கோபம் போன்றவை அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும்.
இவை எதிர்மறை எண்ணங்களை கொண்டு வரும்:
அதன்படி உடைந்த கண்ணாடிகள், பிளாஸ்டிக் பொருட்கள், மண் பாண்டங்கள், காய்ந்த செடிகள் அல்லது பட்டுப்போன மரங்கள், ஓடாத கடிகாரம், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், உபயோகம் இல்லாத பழைய துணிகள், போன்றவை எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் என்பதால், இவற்றை ஒருபோதும் உங்கள் வீட்டில் வைக்க வேண்டாம். மேலும் இவை எதிர்மறை எண்ணங்களை பெருக்குவதோடு மட்டுமல்லாமல், வருமானத்தில் தடையையும் கொண்டுவரும்.
அது போல் காய்ந்த செடியானது வீட்டை சுற்றி எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும். பட்டுப்போன செடி அல்லது மரமானது வீட்டில் வறுமையை உண்டாக்கும். ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்துவதால், வீட்டில் கடன் பிரச்சனை, சண்டை சச்சரவுகள் நிகழும். மேலும் துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், துணிகள் ஆகியவையும் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்கும்.
இதுபோன்று பொருட்கள் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் நீங்கள் வைத்திருந்தால் அவற்றை உடனே அகற்றுவது நல்லது. இது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டை நீங்கள் எப்போதும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரித்து வந்தால் வீட்டில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.