பல்லி உங்கள் மேல் எந்த இடத்தில் விழுந்தால் அதிஷ்டம் கிடைக்கும் தெரியுமா..?

Published : Jul 16, 2024, 01:04 PM ISTUpdated : Jul 16, 2024, 01:35 PM IST
பல்லி உங்கள் மேல் எந்த இடத்தில் விழுந்தால் அதிஷ்டம் கிடைக்கும் தெரியுமா..?

சுருக்கம்

Palli Vilum Palan : பல்லி நம் உடலில் விழுந்தால் அது அசுபம் என்று பல நம்புகிறார்கள். ஆனால், அதற்கான உண்மையான அர்த்தம் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை பற்றி இப்போது இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெரும்பாலான வீடுகளில் பல்லி எங்காவது மூலையில் இருக்கும். இவற்றைப் பார்த்தவுடன் பெரும்பாலானோர் பயந்து கத்திவிடுவார்கள். காரணம், அது பார்ப்பதற்கு ரொம்பவே அருவருப்பாக இருக்கும். சில சமயம் திடீரென்று கூட பல்லி நம்மில் விழுந்து விடும். பல்லி நம் மீது விழுந்தால் அது அசுபம் என்று பல நம்புகிறார்கள். மேலும் அது விழுந்த உடனே  குளிக்க வேண்டும். இதனால் அதன் தீமைகளும் குறையும். 

மறுபுறம், பல்லி நம் மேல் விழுந்தால் அது எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது. சாஸ்திரங்கள் படி, உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்லி விழுந்தால் ஏற்படும் பல்வேறு அசுப மற்றும் சுப பலன்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எனவே, பல்லி உடலில் விழுந்தால் அதற்கான உண்மையான அர்த்தம் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை பற்றி இப்போது இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பல்லி விழுந்தால் சில பொதுவான பலன்கள்:

  • பல்லி ஒருவரது இடது கையில் விழுந்தால் மன உளைச்சலையும், இடது கை விரல்களை உரசி சென்றால் மன கவலையையும் ஏற்படுத்தும்.
  • ஒரு ஏழையின் தலையில் பல்லி விழுந்தால், அவர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ போகிறார் என்று அர்த்தம். அதுவே, ஒரு பணக்காரர் தலையில் விழுந்தால் அவர் தனது செல்வத்தை இழக்க போகிறார் என்பதை குறிக்கிறது.
  • அதுபோல் ஒரு பணக்கார நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அவர் மீது பல்லி விழுந்தால்,அவருக்கு மரணம் நிகழ போகிறது என்று அர்த்தம். அதுவே, நோய்வாய்ப்பட்ட ஒரு ஏழையின் மீது விழுந்தால் அப்படியே தலைகீழாக நடக்கும்.
  • ஒருவரது வலது காதில் பல்லி விழுந்தால், அவருக்கு நீண்ட ஆயுள் அதிகரிக்கும். அதுவே இடது காதில் விழுந்தால் அவரது ஆதாயம் மேம்படும்.
  • ஒருவரது உதட்டிற்கு மேல் பல்லி விழுந்தால அவரது செல்வம் அழிந்து போகும் என்பதை குறிக்கிறது. அதுவே, உதட்டிற்கு கீழ் விழுந்தால் அவர் பணக்கார வாழ்க்கையை வாழப் போகிறார் என்று அர்த்தம்.
  • ஒருவரது தொடைக்கு மேல் பல்லி விழுந்தால் அந்த நபருக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதோடு, அவர் தனது எதிரிகளையும் கீழே விழ்த்துவார். 
  • அதுபோல ஒருநபரின் இரண்டு முள்ளங்கால்களுக்கு இடையே பல்லி விழுந்தால் அவர் நல்ல வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். மேலும் கணுக்கால் மற்றும் பாதங்களுக்கு இடையே பல்லி விழுந்தால் அவரது வாழ்க்கை துணையுடான உறவு அழியும்.
  • முக்கியமாக ஒருவருக்கு இதயம் இருக்கும் பகுதியின் மேல் பல்லி விழுந்தால் அவர் மரணம் கொண்டு துன்பத்தை அனுபவிக்க போகிறார் என்று அர்த்தம்.

இதையும் படிங்க:  பல்லி இனி உங்கள் வீட்டு பக்கமே வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!!

ஆண்கள் மீது பல்லி விழுந்தால் கிடைக்கும் பலன்கள்:

  • ஒரு ஆணின் முகத்தின் மேல் பல்லி விழுந்தால் அவருக்கு நல்ல நிதி லாபத்தை கிடைக்கும். மேலும், ஆணின் இடது கண்ணின் பல்லி விழுந்தால் அது அவருக்கு சகுனமாகவும், வலது கண்ணில் பல்லி விழுந்தால் இழப்பு மற்றும் தோல்வி வருவதற்கான அறிகுறியாகும்.
  • ஒரு ஆணின் நெற்றியில் பலி விழுந்தால் பிரிவையும், வாய் மேல் பல்லி விழுந்தால் ஆரோக்கிய பிரச்சனைகளையும், விரல்களின் மேல் பல்லி விழுந்தால் பழைய நண்பர்களை போவதாக அர்த்தம்.
  • ஒரு ஆணுக்கு அவரது கால் விரல்களில் பல்லி விழுந்தால் நோயையும், மீசையின் மேல் பல்லி விழுந்தால் தடைகள் வரபோகிறது என்று அர்த்தம்.
  • ஆணின் இடது கைவிரல் நகங்களில் பல்லி விழுந்தால் செல்வத்தையும், அதுவே வலது கைவிரல் நகங்களில் பல்லி விழுந்தால் தேவையில்லாத செலவுகள் வரும் என்பதையும் குறிக்கிறது.
  • ஆணின் இடது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் வெற்றியைக் குறிக்கிறது. அதுவே வலது பக்க கழுத்தில் விழுந்தால் எதிரிகள் பெருகுவார்கள் என்று அர்த்தம். 
  • ஆணின் இடது காலில் பல்லி விழுந்தால், அவருக்கு இழப்புகள் ஏற்பட போகிறது என்பதன் அறிகுறியாகும்.
  • அதுவே காலில் பின்புறத்தில் பல்லி விழுந்தால் நல்ல பிரயாணத்தையும், காலின் மேல் பல்லி விழுந்தால் கஷ்ட காலம் வரும் என்று அர்த்தம்.

இதையும் படிங்க:  இத மட்டும் செய்யுங்க.. இனி வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லிகள் தொல்லை இருக்காது!

பெண்கள் மீது பல்லி விழுந்தால் கிடைக்கும் பலன்கள்:

  • ஒரு பெண் இருக்கு அவளது வலது கண்ணில் பல்லி விழுந்தால், அவளுக்கு மனக்கவலை, பதட்டம் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. அதுவே, அவளது இடது கண்ணில் விழுந்தால் அவளது வாழ்க்கை துணை அவளிடம் அதிக அன்பாக இருக்கப் போகிறார் என்று அர்த்தம்.
  • ஒரு பெண்ணின் உதட்டின் மேல் பல்லி விழுந்தால் தகராறையும், அதுவே உதட்டின் கீழ் விழுந்தால் அவளுக்கு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது
  • அதுபோல ஒரு பெண்ணிற்கு அவ்வளவு முதுகு பகுதியில் பல்லி விழுந்தால், ஏதாவது ஒரு இறப்பு செய்தியை அவள் கேட்கப் போகிறாள் என்பதை குறிக்கிறது.
  • ஒரு பெண்ணிற்கு அவளது கையில் பல்லி விழுந்தால் நல்ல நிதி நிலைமைகளையும், தோள்பட்டையில் விழுந்தால் நிறைய ஆபரணங்கள் பெறப்போவதாகவும், கால் விரல்களில் விழுந்தால் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதையும் குறிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!