பல்லி இனி உங்கள் வீட்டு பக்கமே வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!!
உங்கள் வீட்டில் பல்லிகள் தொல்லை வராமல் தடுக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை..

எந்த சீசனும் பாராமல் வீட்டின் ஹால், கிச்சன், பாத்ரூம், பெட் ரூம் என எல்லா இடங்களிலும் பல்லிகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். இவை வீட்டில் இருக்கும் பூச்சிகளை தின்று அங்கேயே சுற்றி தெரியும். பல்லிகளைக் கண்டாலே சிலர் எரிச்சல் அடைந்து அவற்றைக் கொன்று விடுகிறார்கள் அல்லது ரசாயனம் கலந்த ஸ்பிரேயை அதன் மீது தெளிக்கிறார்கள். எனவே, அவற்றை வீட்டில் இருந்து விரட்டவும், இனி வருவதை தடுக்கவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன. அவை..
மிளகு: வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள், கொத்தமல்லி தூள் போன்ற வலுவான மசாலா வாசனை பள்ளிகளுக்கு பிடிக்காது. எனவே,
பல்லிகள் வீட்டிற்குள் வராமல் இருக்க, இந்த மசாலாப் பொருட்களை தண்ணீரில் கலந்து பல்லி வரும் இடத்தில் தெளிக்கவும் மற்றும் அந்த பொடியை மூலைகளில் தூவுங்கள்.
புதினா: பல்லிகளுக்கு புதினா வாசனையே பிடிக்காது. எனவே, பல்லிகள் வரும் இடத்தில் புதினாவை ஓடி விடும். அதுமட்டுமின்றி வீட்டில் இருக்கும் பல்லியை விரட்ட பெப்பர் எண்ணையை பயன்படுத்தலாம்.
பூண்டு மற்றும் வெங்காயம்: பல்லிகள் பூண்டு மற்றும் வெங்காயத்திற்கு பயப்படும். காரணம் அவற்றின் வாசனை அதுகளுக்கு பிடிக்காது. எனவே, இவற்றை நீங்கள் பல்லிகள் வரும் இடத்தில் வைக்கலாம். மேலும், பல்லிகள் அடிக்கடி வரும் இடங்களில் இவற்றின் சாற்றினைத் தெளித்தால், உடனே அங்கிருந்து ஓடிவிடும்.
இதையும் படிங்க: இத மட்டும் செய்யுங்க.. இனி வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லிகள் தொல்லை இருக்காது!
கற்பூரம்: கற்பூரத்தின் வலுவான வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. மேலும் இந்த வாசையால் அவை வீட்டிற்குள் வராது. எனவே, பல்லிகள் வரும் மூலையில் கற்பூரத்தை வையுங்கள் அல்லது கற்பூரத்தின் தண்ணீர் தெளியுங்கள்.
இதையும் படிங்க: காசியில் மட்டும் கருடனையும், பல்லியையும் பார்க்கவே முடியாது.. ஏன் தெரியுமா? வியப்பூட்டும் தகவல்..
வேறு சில குறிப்புகள்: வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடியே வையுங்கள். சூரிய ஒளி அதிகம் வீட்டில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இது பல்லிகளை ஈர்க்கிறது. வீட்டை சுத்தி அதிக மரம் இருப்பதை தவிர்க்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D