பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டுமா? இன்றே கடைசி வாய்ப்பு

Published : Jan 20, 2023, 09:57 AM IST
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டுமா? இன்றே கடைசி வாய்ப்பு

சுருக்கம்

பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் வருகின்ற 27ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் இன்று மாலைக்குள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் வருகின்ற 27ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று என்பதால் இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்களில் 2 ஆயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்தாம் பொதுவாக சொல்லாமல்.. பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை உறுதி செய்க.. வேல்முருகன்.!

அதன்படி கும்பாபிஷேகத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் திருக்கோவில் இணைதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் இத்துறை வலைதளமான www.hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களின் மூலம் பக்தர்கள் வருகின்ற 18ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர், மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தக் கொள்ளலாம். கட்டணமில்லா முன்பதிவு செய்வதற்கு பக்தர்கள் கீழ்கண்ட ஏழு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சான்றாகக் கொண்டு

1 நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (Pan Card)
2 வாகாளர் அடையாள அட்டை 
3 பாஸ்போர்ட்
4 நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு
5 ஓட்டுநர் உரிமம்
6 குடும்ப அட்டை
7 ஆதார் அட்டை
தங்களது கைப்பேசி எண்ணுடன் மின்னஞ்சல் முகவரி இருப்பின் விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்: தட்டி கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்

மேலும் பதிவு செய்யப்படும் நபர்களில் 21ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி/கைபேசி எண்ணிற்கு 22ம் தேதி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!