Narasimha Jayanti 2026 நாளை நரசிம்ம ஜெயந்தி 2026: தீமைகளை அழித்து வெற்றியைத் தரும் அற்புத வழிபாடு

Published : Apr 29, 2026, 03:20 PM IST
Narasimha Jayanti 2026

சுருக்கம்

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகவும் உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது நரசிம்ம அவதாரம். ஆனால் கூப்பிட்ட உடன் உடனடியாக ஓடி வந்து அருள் செய்யக் கூடியவரும் நரசிம்மர் தான். நரசிம்மர் அவதரித்த தினத்தை நரசிம்ம ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வியாழக்கிழமை நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் தனித்துவமானது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நீண்ட காலம் திட்டமிடப்பட்டவை. ஆனால், நரசிம்ம அவதாரம் என்பது தன் பக்தன் பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிக்க, ஒரு நொடிப்பொழுதில் தூணிலிருந்து தோன்றிய அதிரடி அவதாரம். சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் இந்த நரசிம்ம ஜெயந்தி, நம் வாழ்வில் தீர்க்க முடியாத சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு உன்னத நாளாகும்.

நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டு முறை:

- நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்டது அந்தி சாயும் பொழுது (மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை) என்பதால், நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டை மாலையில் தான் செய்ய வேண்டும். அன்று அதிகாலையிலேயே நீராடி, வீட்டைத் தூய்மை செய்து நரசிம்மர் திருவுருவப் படத்திற்கு மணமுள்ள மலர்களைச் சாற்ற வேண்டும். - பானக நிவேதனம்: நரசிம்மருக்கு மிகவும் பிடித்தது பானகம். சுக்கு, வெல்லம், ஏலக்காய் சேர்த்த பானகம் அவரது கோபத்தைத் தணிப்பதாக ஐதீகம். இதனுடன் காய்ச்சாத குளிர்ந்த பால் மற்றும் தயிர் சாதம் நிவேதனம் செய்வது விசேஷம். - மலர் வழிபாடு: லக்ஷ்மி நரசிம்மரை வழிபடும் போது துளசி, சிவப்புத் தாமரை மலர்களையும், செவ்வரளிப் பூக்களையும் சமர்ப்பிப்பது அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும்.

சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள் :

பலரும் நரசிம்மரின் உக்கிரமான மந்திரங்களைச் சொல்ல அஞ்சுவார்கள். ஆனால், எளிய பக்தர்களுக்கு அவர் ஒரு தாயைப் போன்றவர். "மரண பயம்" நீங்கவும், கடன் தொல்லைகள் அகலவும், எதிரிகள் தொல்லை, பயம், நோய் தீர கீழே உள்ள மந்திரம் மிகவும் விசேஷமானது:

"உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்"

"நரசிம்ம கவசம்" அல்லது நரசிம்ம மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது சத்ரு (எதிரி) பயத்தை அறவே நீக்கும். உக்கிர நரசிம்மரை விட, லக்ஷ்மி தேவி இடது மடியில் அமர்ந்திருக்கும் 'மாலோல நரசிம்மரை' தியானிப்பது இல்லறத்தில் அமைதியைத் தரும்.

தானங்களின் பலன்கள்:

நரசிம்ம ஜெயந்தி அன்று அன்னதானம் செய்வது சிறப்பு என்றாலும், அன்று "தண்ணீர் பந்தல்" அமைப்பது அல்லது கோடை காலத்திற்குத் தேவையான விசிறி, குடை, செருப்பு போன்றவற்றைத் தானம் செய்வது நரசிம்மருக்குப் ப்ரீதியானது. மேலும், பலரும் அறியாத ஒரு தகவல் என்னவென்றால், நரசிம்ம ஜெயந்தி அன்று ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒரு வேளை உணவும், வஸ்திரமும் (துணி) தானம் செய்து, அவர்களது ஆசியைப் பெற்றால், உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் மற்றும் பித்ரு தோஷங்களின் தாக்கம் பெருமளவு குறையும்.

தவிர்க்க வேண்டியவை :

- பகல் உறக்கம்: அன்று பகல் முழுதும் விரதம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் உட்கொள்ளலாம். ஆனால், பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். - கோபம் மற்றும் வீண் வாக்குவாதம்: நரசிம்மர் கோபத்தின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், அவரை வழிபடும் நாளில் நாம் யாரிடமும் கோபப்படக் கூடாது. முக்கியமாக யாரையும் இகழ்ந்து பேசக்கூடாது. - புளியோதரை தவிர்த்தல்: பெருமாளுக்குப் பிடித்தமான புளியோதரை அன்று வேண்டாம். மாறாக இனிப்புப் பொங்கல் அல்லது தயிர் சாதம் மட்டுமே நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

யாரும் அறியாத ரகசிய வழிபாடு :

நரசிம்ம ஜெயந்தி அன்று மாலை வேளையில், உங்கள் வீட்டின் நிலை வாசலில் நெய் விளக்கேற்றி, ஒரு தூணிற்கு (அல்லது சுவருக்கு) சந்தனம், குங்குமம் இட்டு, நரசிம்மர் அங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதி வணங்குங்கள். நரசிம்மர் எங்கும் நிறைந்திருப்பவர் என்பதால், அந்தத் தூணிலேயே அவர் ஆசி வழங்கி உங்கள் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிப்பார். "நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை" என்பார்கள். அதாவது நீங்கள் இன்று ஒரு வேண்டுதலை வைத்தால், அதைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் கருணை அவதாரமே நரசிம்மர். இந்த நரசிம்ம ஜெயந்தியில் அவரைச் சரணடைந்து சகல துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவோம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

pradosh vrat புதன்கிழமை வரும் 'புத-பிரதோஷத்தின்' அபூர்வ ரகசியங்களும் வழிபாட்டு பலன்களும்
தீராத கடனும் தீரும் பிரதோஷ வழிபாடு..! இன்று இந்த ஒரு வழிபாடு உங்கள் மொத்த கஷ்டத்தையும் போக்கும்..