மார்ச் மாதத்தில் வரும் முக்கிய விரதம், பண்டிகைகள் குறித்த முழுவிவரம்.. விசேஷங்களை தவறவிடாதீங்க..!

By Ma Riya  |  First Published Feb 28, 2023, 3:58 PM IST

March Month 2023: மார்ச் மாதத்தில் வரும் முக்கியமான விரதம், பண்டிகைகள் குறித்த மொத்த தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு மாதமும் சிறப்பு விரதங்களும், பண்டிகைகளும் உண்டு. அவற்றை நாம் தவறவிடாமல் இறைவனுக்கு விரதமிருந்து வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். விரதம் இல்லாவிட்டாலும், கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் கூட போதும். அதற்கு உதவியாக இங்கு  மார்ச் மாதம் 2023 ஆண்டிற்கான முக்கிய விரதம், விசேஷங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. 

மார்ச் மாதம் ரொம்பவே விஷேசமானது. இந்த பதிவில் மார்ச்சில் வரும் பண்டிகைகள் குறித்தும் அதன் தேதி தெரிந்துக் கொள்ளலாம். மார்ச் மாதத்தில் உள்ள 31 நாள்களில், சுமார் 19 நாள்கள் விசேஷமானவை. அதன் விவரம் பின்வருமாறு: 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சியால் யோகம் பெறும் 4 ராசிகள்.. உலகமே எதிர்த்தாலும் இவங்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை தான்

மார்ச் மாதத்தில் வரும் முக்கிய விரதம், பண்டிகைகள்
தேதி பண்டிகை,விரதம்
மார்ச் 03 - வெள்ளி      ஏகாதசி விரதம்
மார்ச் 04  - சனி    பிரதோஷம்
மார்ச் 06 - திங்கள்   மாசி மகம்
மார்ச் 07-  செவ்வாய்     பௌர்ணமி விரதம் 
மார்ச் 08  - புதன்     ஹோலி 
மார்ச் 11  - சனி     சங்கடஹர சதுர்த்தி விரதம்
மார்ச் 12  - ஞாயிறு     ரங்க பஞ்சமி
மார்ச் 14  - செவ்வாய்     சீதளா சப்தமி
மார்ச் 15  - புதன்    

சபரிமலை நடை திறப்பு,மீனா சங்கராந்தி , காரடையான் நோன்பு, சீதளா அஷ்டமி

மார்ச் 18  - சனி     திருவோண விரதம், ஏகாதசி விரதம்
மார்ச் 19-ஞாயிறு   பிரதோஷம்
மார்ச் 20 - திங்கள்    மாத சிவராத்திரி
மார்ச் 21 - செவ்வாய்   அமாவாசை
மார்ச் 22  - புதன்  சந்திர தரிசனம் , இளவேனில்காலம், உகாதி 
மார்ச் 23  - வியாழன் ரம்ஜான் முதல் நாள்
மார்ச் 24-  வெள்ளி     மத்ஸ்ய ஜெயந்தி
மார்ச் 25 - சனி    சதுர்த்தி விரதம், கார்த்திகை விரதம்
மார்ச் 27 - திங்கள்      சஷ்டி விரதம், சோமவார விரதம்
மார்ச் 30 - வியாழன்  ஸ்ரீராமநவமி

இதையும் படிங்க: மார்ச் மாதம் வந்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்.. பண மழையில் நனைவார்கள்!!

click me!