பைரவரை வழிபட உகந்த நேரம் காலம் குறித்தும், வழிபடும் முறையும் முழுவிவரம்..
நம்முடைய அச்சத்தை நீக்கி, துன்பங்களில் இருந்து நம்மை காத்தருளும் தெய்வம் தான் பைரவர். கொடிய அபாயங்கள், பகை ஆகியவை நம்மை அணுகாமல் இருக்க பைரவரை வழிபட வேண்டும். அவரை வழிபட வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, பரணி நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் ராகு காலம் போன்றவை ஏற்ற காலங்களாகும்.
அஷ்டமி திதி அன்று நல்ல காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம் என சொல்லப்படுகிறது. ஆனாலும் வழிபாட்டிற்குரிய திதியாக இது குறிப்பிடப்படுகிறது. அஷ்டமி வழிபாடு ரொம்ப சக்தி கொண்டது. பைரவரை மனதார நினைத்து வழிபட்டாலே நம்முடைய துன்பங்கள் எல்லாம் தவிடு பொடியாகிவிடும் என்பது ஐதீகம்.
பைரவர் வழிபாடு
வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய இரண்டு அஷ்டமிகளும் ஒரே மாதத்தில் வரும். இதில் எந்த தினத்தில் எப்படி வழிபட வேண்டும் என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனை இங்கு தெளிவாக காணலாம்.
மக்கள் அஷ்டமி என்பதே பைரவரை வழிபடதான் என கண்மூடித்தனமாக நம்பி வருகின்றனர். வளர்பிறையோ, தேய்பிறையோ அஷ்டமி தானே என நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. அஷ்டமியில் நாம் வழிபடும் பைரவர் ஒருவாராகினும், வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய இரண்டு நாள்களிம் வெவ்வேறு பலன்களை தரக் கூடியது.
அஷ்டமி திதியில் நிலவும் குழப்பம்
நாம் எந்த இறைவனை வணங்கினாலும் கவலைகள் தீர வேண்டும் என்றுதான் நினைப்போம். இப்படி பிரச்சனைகள் தீர வேண்டும் என மனதில் நினைத்து வழிபாடு அல்லது விரதம் பிடிப்பவர்கள் தேய்பிறை திதியில் தொடங்கி வளர்பிறை திதியில் நிறைவு செய்ய வேண்டும். கவலைகள் தீர வழிபடுபவர்கள் தேய்பிறையிலும், நினைத்த காரியங்கள் நடக்க நினைப்பவர்கள் வளர்பிறையிலும் வழிபாடு நடத்த வேண்டும். ஏனெனில் வளர்பிறை அஷ்டமியில் பைரவரிடம் பிரார்த்தனை செய்தால் வேண்டியவை வளர்ந்து கொண்டே செல்லும் என்பது ஐதீகம். அதனால் தான் வளர்பிறை அஷ்டமியில் கஷ்டங்கள் தீர வேண்டுவதில்லை. அதை தேய்பிறையில் சொல்லி வழிபட்டால் தான் கர்ம வினைகள் கரைந்து நலம் வாழ முடியும்.
எப்போது வழிபட வேண்டும்?
வளர்பிறை அஷ்டமியில் வழிபடும்போது ராகு காலத்தில் தான் வழிபாட்டை செய்ய வேண்டும் என கட்டாயமில்லை. அன்றைய தினம் நமக்கேற்ற நேரத்தில் வழிபாட்டை செய்யலாம். வளர்பிறை அஷ்டமி திதியில் வழிபாடு செய்பவர்கள், முக்கியமாக தேய்பிறை அஷ்டமியில் வழிபடக் கூடாது. வளர்பிறை அஷ்டமி அன்று சதுர்கால பைரவரை மாலை வேளையில் வில்வம், மணக்கும் மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, 11 தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தினால் வறுமை அறவே நீங்கும்.
இதையும் படிங்க: கடவுளுக்கு படைக்கும் நைவேத்தியம்.. மனதார வேண்டி நாம் படைத்ததை கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது?
வளர்பிறை அஷ்டமி அன்று சொர்ணாகர்ஷண பைரவரை வணங்கினால் செல்வம் பொங்கி பெருகும். இந்த திதியில் பைரவரை வழிபடுவது முன்ஜென்மத்தில் உள்ள 5 பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகள் தீரும். நாள்தோறும் பைரவரை வணங்கினால் நெடுநாள் வாராக்கடன்கள் கூட தேடி வந்துவிடும். வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும்.
தேய்பிறையில் அஷ்டமி வழிபாடு
துன்பங்கள், துயரங்கள் தீர பைரவரை வழிபடுபவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று ராகு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். தேய்பிறை அன்று வருவதை தான் பைரவாஷ்டமி என்கிறோம். தேய்பிறை அஷ்டமி அன்று உச்சியில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கு ஏற்றி, சிவப்பு பூக்களால் அர்ச்சனை செய்து பைரவரை வணங்கினால் கிரக தோஷங்கள் கூட நீங்கும். மன அழுத்தம் தரும் கடன் தொல்லைகூட நீங்கிவிடும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை மனதார நினைந்து வழிபட்டாலே தீராத நோய்களும் குணமாகும். பட்ட துன்பங்கள் யாவும் விலகி ஓடும்.
இதையும் படிங்க: வாஸ்துபடி வீட்டுல வன்னி மரம் வெச்சா என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா? யாருக்கும் சொல்லாதீங்க..!