4 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெற்ற மாம்பழத் தேரோட்டம்

By Velmurugan sFirst Published May 25, 2023, 2:45 PM IST
Highlights

பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் 25 அடி உயர மாம்பழ தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 4 ஆண்டகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் 25 அடி உயர தேரானது மா, பலா,வாழை, நுங்கு, எழுமிச்சை பழம், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்கரிப்பட்டது. 

தொடர்ந்து அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தேர் வரும் வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தேரின் மீது மாம்பழங்களை வீசினர். சூறை வீசப்பட்ட  மாம்பழங்களை பக்தர்கள் பக்தியுடன் பிடித்து தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் உடையபிராட்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.

பழனி கோவிலில் தங்க சங்கிலியை உண்டியலில் போட்ட பக்தை; கோவில் நிர்வாகத்தின் செயலால் நெகிழ்ச்சி

இவ்வாறாக முக்கிய ‌வீதிகள் ‌வழியாக மாம்பழ சூறையுடன் சென்ற தேரானது தேர்முட்டி வீதியில் நிலைக்கு வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து  இழுத்து சென்றனர். பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன இளம் விவசாயியின் உயிர்; நியாயம் கேட்டு உறவினர்கள் மறியல்

click me!