மகாசிவராத்திரி அன்று தரிசிக்க வேண்டிய புகழ்பெற்ற சிவன் கோயில்கள் தெரியுமா? இங்கே போனால் கட்டாயம் பலன் உறுதி

By Ma Riya  |  First Published Feb 11, 2023, 10:54 AM IST

சிவனருள் வேண்டும் என நினைப்பவர்கள் மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவர். அந்த நாளில் சிவபெருமானின் அருளை முழுமையாக பெற தரிசிக்க வேண்டிய புகழ்பெற்ற சிவன் கோயில்கள்..


மகாசிவராத்திரி அன்று சிவபெருமானின் ஆசியை பெற கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சிலர் மகாசிவராத்திரி அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். அன்றைய தினம் பிரமாண்டமான கொண்டாட்டங்களைக் கண்டு மகிழ, தென் மாநிலங்களில் இருக்கும் புகழ்பெற்ற பழமையான சிவன் கோயில்களை குறித்து இங்கு காணலாம். 

தஞ்சை பெரிய கோயில் 

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் சிவன் கோயில்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையான கோயில். இங்கு இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் வழிபட வருவர். மகா சிவராத்திரி அன்று இங்கு சென்று வழிபட்டால் நன்மைகள் பெருகும். 

முருதேஷ்வர் கோயில், கர்நாடகா 

மகா சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருதேஷ்வர் கோவிலுக்கு படையெடுப்பார்கள். கர்நாடகாவில் உள்ள முருதேஷ்வர் கோவில், கந்துகா மலையில் கட்டப்பட்டு மூன்று பக்கங்களிலும் அரபிக்கடலால் சூழப்பட்டிருக்கும். இந்த காட்சி மனதுக்கு இன்பம் பயக்கும். கிட்டத்தட்ட 20 அடுக்கு கோபுரம் கொண்ட இந்த கோயிலில், உலகின் இரண்டாவது உயரமான சிவன் சிலை அமைந்துள்ளது. 

விருபாக்‌ஷா கோயில், ஹம்பி

எழில் கொஞ்சும் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில், விஜயநகரப் பேரரசின் அற்புத கொடை. பிரமாண்டமான கோபுரம், அழகான கட்டிடக்கலைக்கு இக்கோயில் பெயர் பெற்றது. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இங்கு மகா சிவராத்திரி அன்று தரிசனம் செய்யலாம். 

ஐராவதேஸ்வர் கோயில், கும்பகோணம்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரர் கோயில், திராவிட கட்டிடக்கலைக்கு சான்று. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறியப்படும் இந்த கோயில் கிபி 12 ஆம் நூற்றாண்டில் கட்டி எழுப்பப்பட்டது. இங்கு மகா சிவராத்திரி தரிசனம் செய்தால் பலன் கிடைக்கும். இக்கோயில் அதிசயமான கற்சிற்பங்களுக்கு பிரபலமானது.

வடக்குநாதன் கோயில், கேரளா 

தென்னிந்தியாவில் மகா சிவராத்திரியின் போது தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில் திருச்சூரின் வடக்குநாதன் கோயிலாகும். இது கேரள பாணி கட்டிடக்கலையால் அறியப்படும் சிவன் கோயில். மகா சிவராத்திரி அன்று தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சூருக்கு படையெடுப்பர். இங்கு நடைபெறும் மாபெரும் திருவிழா அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. 

click me!