குலதெய்வ கோயிலுக்கு இந்த ஒரு பொருளை உங்கள் கையால் வாங்கி கொடுத்தால் போதும், வீட்டு நல்ல காரியம் தானா நடக்கும்

By Ma Riya  |  First Published Feb 10, 2023, 7:21 PM IST

உங்களுடைய கையினால் குலதெய்வ கோயிலுக்கு சில விஷயங்களை செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். 


குலத்தை காக்கும் தெய்வத்தை போற்றும் விதமாக, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வ வழிபாட்டை பின்பற்றுவர். இதை தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தாம் குலம் தழைத்தோங்கும். 

நம் வீட்டில் எந்த விசேஷங்களையும் செய்ய முடியாத தடைகள் ஏற்பட்டால், குலதெய்வம் வழிபாடு செய்ய வேண்டும் என பெரியோர் கூறுவர். திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை, பொருளாதார பிரச்சனை என அடுத்தடுத்த சிக்கல்கள் ஏற்பட்டால் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரங்களின் விதி. குலதெய்வம் மனம் குளிர்ந்தாலே நம் வீட்டு பிரச்சனைகள் தீரும். உங்களுடைய குலதெய்வம் யாராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். 

Tap to resize

Latest Videos

தானம் செய்யுங்கள்.. 

இந்த தானம் ரொம்ப எளிமையானது. உங்கள் பொருளாதாரத்திற்கு ஏற்ப வெல்லத்தை வாங்கி குலதெய்வ கோயிலுக்கு தானமாக கொடுங்கள். ஆனால் அதை உங்கள் கைகளால் கொடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் குலதெய்வ கோயிலில் மடப்பள்ளி இருந்தால் அங்கு செண்றும் தானம் அளிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு கிலோ வெல்லத்தை குலதெய்வத்திற்கு தானமாக கொடுக்கலாம். அதை குலதெய்வ பிரசாதம் செய்ய உபயோகம் செய்ய வேண்டும். அதிகமாகா வாங்க வசதியிருந்தால் அப்படியும் வாங்கி கொடுக்கலாம். 

குலதெய்வ கோயிலுக்கு போகும்போதெல்லாம் வெல்லத்தை வாங்கி கொண்டு செல்லுங்கள். வீட்டில் இருந்து தான் வெல்லம் கொண்டு செல்ல வேண்டும். குலதெய்வ கோவில் இருக்கும் ஊரில் வெல்லம் வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடிவெடுத்து விட்டால், முன்கூட்டியே வெல்லத்தை வாங்கி வீட்டில் வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். 

வெல்லத்தால் துன்பங்கள் கரையும்..

உங்களால் மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடிந்தால் இந்த தானத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். இந்த தானத்தால் உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இன்பமான விஷயங்கள் மட்டுமே நடக்கும். தீராத நோய், கடன் சுமை போன்றவை இந்த பரிகாரம் மூலம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். இந்த தானம் செய்யும் போது குலதெய்வத்திடம் வெல்லம் போல உங்களுடைய துன்பங்களும் கரைய வேண்டும் என மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். 

உங்களுடைய குலதெய்வ கோயிலில் குளம் இருக்கும் பட்சத்தில் அங்கு உங்கள் கைகளால் ஒரு கட்டி வெல்லத்தை கரையுங்கள். இதனால் உங்களுடைய நோய்களும், குடும்ப கஷ்டங்களும் உங்களை விட்டு அகலும். குலதெய்வ கோயிலுக்கு செல்ல நேரமில்லை, வேலை பளு அதிகமாக இருக்கிறது. கோயிலுக்கு செல்ல நினைக்கும் போது தடை வருகிறது என காரணங்களை சொல்பவர்களுக்கும் பரிகாரம் இருக்கிறது. 

குலதெய்வத்தை தரிசிக்க பரிகாரம் 

குலதெய்வ கோயிலுக்கு செல்ல விரும்புபவர்கள் வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து நிழலில் காயவைத்து கொள்ளுங்கள். அதில் சில்லறை காசுகளை கைப்பிடி அளவு வைத்து விடுங்கள். சில்லறைகளை இந்த துணியில் வைக்கும் போது 'குலதெய்வ கோயிலுக்கு சீக்கிரம் செல்ல வேண்டும்' என பிரார்த்தனை செய்து முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த காணிக்கையை குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது குலதெய்வத்திற்கே செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள். 

இந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். விரைவில் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு தன்னால் கைகூடி வரும். குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது இந்த காணிக்கை முடிச்சையும், வெல்லத்தையும் கொண்டு போக மறக்கவே கூடாது. நல்லதே நடக்கும்.

இதையும் படிங்க: புருவ மத்தியில் விபூதியை பவித்ரமான இந்த விரலில் தொட்டு வைத்தால் தீவினைகளில் தீரும்.. இது உண்மையா?

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?

click me!