மகா சிவராத்திரி 2024: சிவனுக்கு பிடித்த ராசிகள் இவர்கள் தான்.. உங்க ராசி இருக்கா..?

Published : Feb 20, 2024, 11:43 AM ISTUpdated : Feb 23, 2024, 09:16 AM IST
மகா சிவராத்திரி 2024: சிவனுக்கு பிடித்த ராசிகள் இவர்கள் தான்.. உங்க ராசி இருக்கா..?

சுருக்கம்

சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் எப்போதும் சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். இப்போது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் எது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

சிவன் இந்து மதத்தின் தலைசிறந்த கடவுள். சிவனை வழிபட சிறந்த நாள் மகா சிவராத்திரி. இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமான் அனைத்து மத மரபுகளுடன் வழிபடப்படுகிறார். சிவன் கோவில்களில் வேண்டுதல்கள் நிறைவேற ருத்ர அபிஷேகமும் நடத்தப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் அனுசரிக்கிறார்கள் மற்றும் மகா சிவராத்திரி விரத நாளில் பாராயணம் செய்யப்படுகிறது. இந்த நாளின் அனைத்து விருப்பங்களையும் சிவபெருமான் அருளுவதாக ஐதீகம்.

சிவபெருமான் தனது பக்தர்களை ஏமாற்ற வில்லை என்றாலும், ஜோதிடம் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் எப்போதும் சிவனின் ஆசிர்வாதத்தை பெறுகிறார்கள். அவர்கள் சிவனுக்கு மிகவும் பிடித்தமான ராசிக்காரர்கள். சிவபெருமான் தனது பக்தர்களை எப்போதும் எந்த பிரச்சனையும் வராமல் காப்பார் என்பது நம்பிக்கை. இப்போது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் எது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மேஷம்: மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய். சிவபெருமான் இந்த ராசிக்காரர்களின் எந்த விதமான பிரச்சினையையும் தீர்த்து வைப்பார். மேலும் இந்த ராசிக்காரர்களின் மீது அவர் மகிழ்ச்சி அடைகிறார். சிவபெருமான் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் நீக்கி செழிப்பிற்கு வழிவகுப்பார். எனவே நீங்கள் மகா சிவராத்திரி அன்று சிவாஷ்டக் பாராயணம் செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். இவர்களுக்கு இந்த சிவராத்திரியில் சிவபெருமானின் சிறப்பு அருளுவார். இந்த மகா சிவராத்திரியில் சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்தல் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

இதையும் படிங்க:  மகா சிவராத்திரி 2024 எப்போது? எப்படி விரதம் இருப்பது? என்ன பலன்கள் கிடைக்கும்?

மகரம்: சனி பகவான் தான் மகர ராசியின் அதிபதி. சனிபகவான் சிவனுக்கு மிகவும் பிடித்தமான பக்தர்களில் ஒருவர். எனவே, மகர ராசிக்காரர்கள் சனிபகவான் மற்றும் சிவன் இருவரிடமும் சிறப்பு ஆசீர்வாதங்களை பெறுகிறார்கள். இவர்கள் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபட வில்வ இலை, பசும்பால் போன்றவற்ற பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:  மகா சிவராத்திரி 2024 : கேட்ட வரம் கிடைக்க.. சிவனருள் பெற கண்டிப்பாக இந்த விரதம் இருங்க!

கும்பம்: சனிபகவான் தான் இந்த ராசியின் அதிபதி. இந்த ராசிக்காரர்களுக்கும் சிவபெருமான் மற்றும் சனி பகவான் சிறப்பு ஆசிர்வாதங்களை தருகிறார்கள். எனவே மகா சிவராத்திரி அன்று, சிவபெருமானை வழிபடுவதுடன் விரதம் இருக்க வேண்டும். நீங்கள் தொழில்முறை முன்னணியில் வெற்றி பெறுவீர்கள். மேலும் செல்வம் மற்றும் வருமானம் அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!