குரோதி தமிழ் புத்தாண்டு: இனி கும்ப ராசியின் ஆட்டம் ஆரம்பம்! பிரமாண்டமான ராஜயோகம்!!

By Kalai Selvi  |  First Published Feb 20, 2024, 10:30 AM IST

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வருகிறது. இந்நிலையில் கிரகங்களின் மாற்றங்களால் கும்ப ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.


குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வருகிறது. இதனால் கிரகங்களின் மாற்றங்களில் மாற்றம் ஏற்பட போகிறது. அதன்படி சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார் அதே போல் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இந்நிலையில் கிரகங்களின் மாற்றங்களால் கும்ப ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மே 1ம் தேதி சித்திரை மாதம் 18 குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்நிலையில் குரு பகவான் கும்ப ராசியின் நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்ய போகிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு சுகமும் சந்தோஷமும் அதிகமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனம் வாங்குவீர்கள்.

Tap to resize

Latest Videos

அதுபோல் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாம் வீடுகளின் மீது விழுவதால், உங்களுக்கு பணம் மோசடி செய்தவர்கள், அவதூறு பரப்பியவர்கள் உங்களை தேடி வருவார்கள். அதுபோல் நீங்கள் பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை பெறுவீர்கள். உங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களது வேலை நிரந்தரமாக கிடைக்கும். மேலும் பதவி உயர்வு அடைவீர்கள்.

இதையும் படிங்க:  குருபெயர்ச்சி 2024 : இன்னும் 2 மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்..

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் வீடுகளின் மீது விழுவதால், உங்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும். நீங்கள் புதிய தொழில் தொடங்கி இருந்தால் அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுபோல் உங்களது பன்னிரெண்டாம் வீட்டை குரு பார்ப்பதால், இதுவரை தூக்கமில்லாமல் தவித்தவர்கள் இனி நிம்மதியாக தூங்குவீர்கள். இதுவரை உங்களது சுபகாரியம் எல்லாம் தடைப்பட்டு இருந்தால் இனி அது  சுகமாக நடைபெறும்.

இதையும் படிங்க: 2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

சனியின் சச மகா யோகம்:
சனிபகவான் ஏழரை சனியில் ஜென்ம சனியாக கும்ப ராசியில் பயணம் செய்யப் போகிறார். இதனால் பல சங்கடங்களை நீங்கள் சந்திக்கலாம், உங்களது சுப காரியங்கள் தடையாகலாம், ஆனாலும்,  சனி பகவானின் சச மஹா யோகம் உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்களது நிதி ஆதாயம் அதிகரிக்கும், பதவி யோகம் உங்களைத் தேடி வரும். நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களுக்கு வேலை இடமாற்றம் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ராகு கேது பயணம்:
குரோதி ஆண்டு முழுவதும் ராகு மற்றும் கேது உங்கள் ராசியின் குடும்பம் மற்றும் ஆயுள் ஸ்தானத்தில் பயணம் செய்வதால், உங்களுக்கு திடீர் ராஜயோகம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். உங்களது வருமானம் அதிகரிக்கும்.

click me!