Madurai chithirai thiruvizha 2026 மதுரை சித்திரை திருவிழாவில் 2026 நடக்கும் இந்த அதிசயம் பற்றிய தெரியுமா?

Published : Apr 20, 2026, 09:18 AM IST
Alagar

சுருக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் அனைத்து மாதத்திலும் திருவிழா நடைபெற்றாலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவே அதிக நாட்கள் நடைபெறும் மிக முக்கியமான உற்சவமாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில் அன்னை மீனாட்சியை தரிசிக்கவும், சித்திரை திருவிழாவை காண்பதற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள்.

உலகப் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா சைவ-வைணவ ஒற்றுமையின் வெளிப்பாடாக நடைபெறுகிறது. சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

மதுரை சித்திரை திருவிழா 2026 :

2026ம் ஆண்டிற்கான மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19ம் தேதியன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி கணபதி பூஜை நடத்தப்பட்டு, ஏப்ரல் 19ம் அன்று காலை கொடியேற்றப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29ம் தேதி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவும், மே 30ம் தேதி துவங்கி, மே 05ம் தேதி வரை மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவும் நடைபெறும். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 26ம் தேதி மதுரையின் அரசியாக அன்னை மீனாட்சி முடிசூடிக் கொள்ளும் மீனாட்சி பட்டாபிஷேகமும், மே 28ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், மே 01ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறும்.

சித்திரை திருவிழாவில் நடக்கும் அதிசயம் :

மதுரை சித்திரை திருவிழாவிற்கு கொடியேற்றப்படும் நாளிலும், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நாளிலும் மதுரையில் இப்போது வரை தொடர்ந்து ஒரு அதிசயம் நடந்து கொண்டு இருக்கிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் சித்திரை மாதத்தில், அக்னி நட்சத்திரம் துவங்கும் சமயத்தில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். ஆனாலும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கும் நாளிலும், கள்ளழகர் வைகை ஆற்றிலும் இறங்கும் நாளிலும் கண்டிப்பாக மழை பெய்யும். இந்த இரண்டு நாட்களும் சிறிதளவாவது சாரல் மழையாவது மண்ணில் விழும். இந்த அதிசயம் காலம் காலமாக மதுரை மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அன்னை மீனாட்சியே மனம் குளிர்ந்து, மகிழ்ச்சியாக இருப்பதற்கு அடையாளமாகவே இந்த மழை பெய்வது மக்கள் நம்புகிறார்கள்.

சாமியின் வீதி உலாவிற்கு இப்படி ஒரு காரணமா?

மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தினமும் மாலையில் சொக்கநாதர் - பிரியாவிடை அம்மன் ஒரு வாகனத்திலும், அவர்களுக்கு பின்னால் மீனாட்சி அம்மன் தனியான வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் வைபவம் நடைபெறும்.ஏதோ சாமி சுற்றி வருகிறது என்று நினைத்து தான் பலரும் இதை கடந்து போவார்கள். ஆனால் இதற்குள் ஆழ்ந்த ஆன்மீக உண்மை மறைந்திருப்பதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். இரண்டு அற்புதமான ஆன்மீக காரணங்கள் இந்த வீதி உலாவிற்கு பின்னால் உள்ளது.

1. வருடத்தின் மற்ற நாட்களில் சாமியை தரிசனம் செய்து, அவரின் அருளை பெறுவதற்காக நாம் தான் கோவிலுக்கு தேடி செல்வோம். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை பக்தர்களை காண சாமியே வீதியில் உலா வந்து, கோவிலுக்கு வர முடியாதவர்களுக்கும் கூட அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அருளை வழங்கக் கூடிய அற்புத நிகழ்வு தான் இந்த திருவீதி உலா. 2. மதுரை சித்திரை திருவிழாவின் போது தினமும் ஒவ்வொரு வாகனங்களில் சாமியும், அம்பாளும் எழுந்தருள்வார்கள். இந்த ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. உதாரணமாக, சித்திரை திருவிழாவின் முதல் நாளில் சொக்கநாதர்- பிரியாவிடை அம்மனுடன் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருள்வார்கள். கற்பக விருட்சம் என்பது கேட்ட வரங்கள் அனைத்தையும் தரக் கூடியதாகும். அது போல பக்தர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தருவதற்காக சாமி முதலில் கற்பக விருட்ச வாகனத்தில் செல்வார். கேட்டது அனைத்தும் கிடைத்து விட்டால் மனிதனுக்கு கர்வம், ஆணவம், அகம்பாவம் என அனைத்து தீய குணங்களும் வந்து விடும். அவற்றை அடக்கி, அவர்களின் மனதில் பக்தியை தந்து, சாமி கொடுத்த வரம் பக்தர்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதால் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன், சாமிக்கு பின்னால் வருகிறாள்.

வாய்ப்பு இருப்பவர்கள் மதுரை சித்திரை திருவிழாவில் ஒருமுறையாவது கலந்து கொள்ளுங்கள். திருவிழாவை முழுவதுமாக காண முடியாவிட்டாலும் சாமியும், அம்பாளும் தினமும் திருவீதி உலா வரும் காட்சியை மட்டுமாவது ஒருமுறை சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள். அன்னை மீனாட்சியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaikasi Amavasai 2026: வரப்போகும் அமாவாசை! மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
Vastu for Wealth: வீட்டில் செல்வம் பெருக உதவும் 10 எளிய வாஸ்து குறிப்புகள்!