Chandra darshan 2026 April மூன்றாம்பிறை சந்திர தரிசனத்திற்கு இத்தனை சிறப்புக்களா?

Published : Apr 18, 2026, 05:22 PM IST
crescent

சுருக்கம்

அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியில் வானில் தோன்றும் மெல்லிய நிலவை தரிசிப்பதே 'சந்திர தரிசனம்' அல்லது 'மூன்றாம் பிறை தரிசனம்' என்று அழைக்கப்படுகிறது. இது இந்து சமயத்தில் மிகவும் புண்ணியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

chandra darshan significance, moondrampirai darshan benefits, chandra darshan correct method, சந்திர தரிசன சிறப்புகள், மூன்றாம்பிறை தரிசன பலன்கள், சந்திர தரிசனம் செய்யும் சரியான முறை

மூன்றாம் பிறை சந்திர தரிசனம் :

மூன்றாம்பிறை சந்திர தரிசனம் சிறப்புக்குரியதாக சொல்லப்படுகிறது. இது சிவபெருமானின் அருளையும், மனநிம்மதியையும், செல்வ செழிப்பையும் தரும் என சொல்லப்படுகிறது. இதுவரை மூன்றாம்பிறை சந்திர தரிசனம் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால், தெரிந்து கொள்ளுங்கள்.

அமாவாசை அன்று வானில் சந்திரனை காண முடியாது. அதற்கு பிறகு வரும் மூன்றாவது நாளில் பிறையாக சந்திரன் தோன்றுவார். இந்த பிறையை சிவபெருமான் தனது தலையில் சூடி, சந்திர மெளலீஸ்வரராக சிவபெருமான் காட்சி அளித்தது இந்த நாளில் தான். அதனால் மூன்றாம் பிறை நாளில் சந்திர தரிசனம் செய்வது, சிவபெருமானின் ஒரு பாதியை தரிசித்த பலன் தரக் கூடியதாகும். மூன்றாம் பிறை சந்திர தரிசனம் முற்பிறவி பாவங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாகும். முந்தைய எத்தனை பிறவிகளில் என்னென்ன பாவங்கள் செய்திருந்தாலும் அதைக் கூடியது என்பதால் இது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என சொல்லப்படுகிறது.

மூன்றாம் பிறை என்பது என்ன?

அமாவாசை அன்றும் அதற்கும் மறுநாளும் வானில் சந்திரன் தெரியாது. அதற்கு அடுத்து வரும் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் சந்திரனை தரிசிப்பதற்கு, மூன்றாம் பிறை சந்திர தரிசனம் என்று பெயர். இந்த மூன்றாம் பிறை பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கும். 2026ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 18ம் தேதியன்று மாலை மூன்றாம்பிறை சந்திர தரிசனம் நிகழ்கிறது. மூன்றாம் பிறை என்பது இரவு வருவதற்கு முன், மாலை 06.30 மணியளவில் தோன்றும் நிலவுக்கு தான் மூன்றாம் பிறை என்று பெயர். இந்த சந்திரனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

மூன்றாம் பிறையின் சிறப்பு :

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்று சொல்லுவார்கள். சிவபெருமான் மட்டுமின்றி, அன்னை காமாட்சி தேவியும் தன்னுடைய தலையில் பிறை நிலவை சூடிய நிலையிலேயே காட்சி தருகிறாள். மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், செல்வம் பெருகும், கேட்ட வரம் கிடைக்கும். சந்தேஷம், மனநிம்மதி, மனநிறைவு தேடி வரும். மன அழுத்தத்தை குறைத்து, ஆயுளை விருத்தி அடைய செய்யும். நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். மூன்றாம் பிறை சந்திரனை தரிசனம் செய்யும் போது சிவபெருமானையும், சந்திரனையும் ஒரே நேரத்தில் தரிசித்த பலன் கிடைக்கும். இதனால் சிவபெருமானின் அருளும், சந்திரனினும் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சந்திர தரிசனம் அதிர்ஷ்டத்தை தருவதாக கருதப்படுகிறது.

சந்திர தரிசனத்தின் மகிமை :

மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காணும் போது வலது கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு வலது புறமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும். பிறகு மீண்டும் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு மூன்றாம் பிறையின் போதும் வழிபட்டால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர். சந்திர தரிசனம் செய்வது சிவபுண்ணியத்திற்கு இணையானதாக சொல்லப்படுகிறது. சிவபெருமான், சந்திரனின் பாவத்தை போக்கி, தனது முடியில் சந்திரனை ஏற்றுக் கொண்டது போல் நாம் சந்திர தரிசனம் செய்து, வழிபடும் போது, நம்முடைய பாவங்களையும் மன்னித்து, கர்மவினைகளை குறைத்து, தன்னுடைய அருளை சிவபெருமான் வழங்கிடுவார் என்பது நம்பிக்கை.

எத்தனை முறை சந்திர தரிசனம் செய்ய வேண்டும்?

- மூன்று சந்திர தரிசனம் தொடர்ந்து தரிசித்தால் அறிவு பெருகும். - நான்கு மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் தொடர்ந்து செய்தால் கர்மவினை அழியும். - ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் வறுமை நீங்கி ராஜயோகம் கிடைக்கும். - ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும். - ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையும் தீரும். - பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் உலகப் புகழ் கிடைக்கும். வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Akshaya Tritiya purchase tips அட்சய திருதிக்கு தங்கம் வாங்க முடியலியா? இந்த 5 பொருளை வாங்குங்க அதிர்ஷ்டம் தேடி வரும்
கோடீஸ்வர யோகத்தை தரும் ரகசிய மந்திரங்கள்.! எப்போ, எப்படி சொல்லனும் தெரியுமா?