உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழாவில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர் .
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. நவராத்திரியையொட்டி சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு மீனாட்சி அம்மன் தினசரி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
இந்நிலையில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவான விஜயதசமியை முன்னிட்டு வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்த இசைகலைஞர்கள் பங்கேற்று பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்கு வழிபாடு நடத்தினர் .
undefined
திருச்சியில் நள்ளிரவில் மண்டை ஓடுகளுடன் நவராத்திரி கொண்டாடிய அகோரிகள்
மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட இந்த வீணை இசை வழிபாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று வீணை இசை வழிபாடு நடத்தினர். இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர் .
குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்; பக்தர்கள் பரவசம்