கோவையில் ரத்தம் சொட்ட சொட்ட அரங்கேறிய கத்தி போடும் திருவிழா

By Dinesh TG  |  First Published Oct 5, 2022, 10:43 AM IST

கோவை டவுண்ஹால் அருகே உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட நடைபெற்ற கத்தி போடும் திருவிழா.


கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்திபோடும் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர். பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கி டவுன்ஹால் அருகே உள்ள சவுடேஸ்வரி கோவிலை வந்தடையும். 

சேலத்தில் குட்கா விற்ற இந்து முன்னணி தலைவர் கைது

Latest Videos

undefined

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ,  தீசுக்கோ என்று பாடல் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில்  வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். 

நாட்டு துப்பாக்கியோடு மான் வேட்டைக்கு சென்றவர்கள் சிசிடிவியால் சிக்கிய சம்பவம்.. அப்பறம் என்னாச்சு..?

இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை  வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் திருமஞ்சன  பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது  பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவு அடைந்தது. பின்னர்  அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்த பட்டு  தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

click me!