கோவிந்தா! கோவிந்தா! பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட! பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்!

By vinoth kumar  |  First Published Apr 23, 2024, 6:56 AM IST

மதுரையில் நடைபெறும் மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் சித்திரை திருவிழாக்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழாவில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொள்வர்.


பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். 

மதுரையில் நடைபெறும் மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் சித்திரை திருவிழாக்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழாவில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொள்வர். குறிப்பாக மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவங்களில் மதுரை மாநகரம் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளிப்பது வழக்கம். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Chithira Poornami 2024 : சித்திர பௌர்ணமி அன்று சித்திரகுப்தரை ஏன் வழிபட வேண்டும்..?

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த  ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கடந்த 19ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் திக் விஜயம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 21ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனையடுத்து மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதலில் விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் இழுக்கப்பட்டன. காலை 6 மணிக்கு பிரியாவிடையுடன், சுந்தரேஸ்வரர் பெரிய தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மீனாட்சியம்மன் சிறிய தேரில் எழுந்தருளினார். 

இந்நிலையில், வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக 21ம் தேதி கள்ளழகர் கோவிலில் இருந்து தங்கக் குதிரையில் அழகர் புறப்பட்டார். கள்ளழகருக்கு மூன்று மாவடியில் ஏப்ரல் 22ம் தேதி எதிர் சேவை நடந்தது. மதுரை நகர் நோக்கி வரும் கள்ளழகரை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்வை கள்ளழகர் எதிர் சேவை என்று அழைக்கிறார்கள். மறுநாள் ஏப்ரல் 23ம் தேதியன்று புறப்பட்டு வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்கு முன்பாக வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து அழகரை வரவேற்றார்.

இதையும் படிங்க:  Monday Astro Tips : உங்கள் எல்லா பிரச்சனைகளும் நொடியில் தீர இன்று 'இந்த' பரிகாரம் செய்யுங்கள்..!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டார். ஆற்றின் மையப் பகுதியில் அமைந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து  கள்ளழகர் இன்று காலை 6 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் கோவிந்தா..கோவிந்தா.. கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. 

click me!