மதுரை சித்திரைத் திருவிழா 2026 'அழகர் ஆற்றில் இறங்குவது' பற்றி உங்களுக்குத் தெரியாத 6 ஆன்மீக ரகசியங்கள்

Published : Apr 21, 2026, 05:37 PM IST
alagar-17868.jpg

சுருக்கம்

மதுரை சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்ற ஒரு மாபெரும் மக்கள் திருவிழாவாகும். சைவம் மற்றும் வைணவத்தை இணைக்கும் இந்த விழா, மதுரையின் கலாச்சாரம் மற்றும் பக்தியின் அடையாளமாகத் திகழ்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி மகிழும் இவ்விழா, ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பறைசாற்றுகிறது.

"மதுரை என்றாலே திருவிழாதான், திருவிழா என்றாலே மதுரைதான்!" உலகமே வியந்து பார்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கிவிட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவில், மீனாட்சி கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இந்த கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும், பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மதுரை சித்திரை திருவிழா ஆன்மீக ரகசியங்கள் :

1. அழகர் ஏன் 'பச்சை பட்டு' உடுத்தி வருகிறார்?

கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் என்ன நிறத்தில் பட்டு உடுத்தி வருகிறார் என்பதைப் பொறுத்து அந்த ஆண்டின் விவசாயம் அமையும் என்பது நம்பிக்கை. ஆனால், இதில் ஒளிந்திருக்கும் ஒரு ரகசியம் என்னவென்றால், அழகர் உடுத்தும் அந்தப் பட்டு 'வானுலகின் அதிர்வுகளை' ஈர்க்கும் தன்மை கொண்டது எனச் சொல்லப்படுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் முன், அந்த பட்டுத் துணியை ஒரு ரகசிய அறையில் வைத்து வர்ண ஜபங்கள் செய்யப்படுகின்றன. பச்சை பட்டு என்பது 'புதன்' கிரகத்தின் அம்சம். புதன் அறிவிற்கும், செழிப்பிற்கும் அதிபதி. மதுரை மக்களின் புத்திசாலித்தனமும், வைகை கரையின் செழிப்பும் அந்த பச்சை பட்டின் அதிர்வுகளால் காக்கப்படுவதாக ஒரு ஐதீகம் உண்டு.

2. மீனாட்சி அம்மனின் 'திருமாங்கல்ய' மர்மம் :

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் கல்யாணத்தின் போது மாற்றப்படும் திருமாங்கல்யம் சாதாரணமானது அல்ல. அது 'மகாசக்தி' பீடத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவில், புதுப்பிக்கப்பட்ட தாலி மற்றும் சரடு அம்மனுக்கு சாத்தப்பட்டு, பழைய தாலி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மாங்கல்ய பலத்தை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. திருக்கல்யாண வைபவத்தில், அம்மனுக்கு கோயில் தேஸ்தானம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சார்பில் பட்டு வஸ்திரமும், புதிய திருமாங்கல்யமும் சாத்தப்படுகிறது.

3. அழகரின் 'வேகவதி' ஆறு ரகசியம் :

இன்று நாம் வைகை என்று அழைக்கிறோம். ஆனால் புராண காலத்தில் இது 'வேகவதி' ஆறு. கள்ளழகர் ஆற்றில் இறங்குவது என்பது வெறும் சடங்கல்ல, அது ஒரு நீர் மேலாண்மை குறியீடு. வைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்த காலங்களில் கூட, அழகர் இறங்கும் அந்த ஒரு நாளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாக மதுரையின் மூத்த குடிமக்கள் இன்றும் அடித்துச் சொல்கிறார்கள். அழகரின் வாகனமான 'தங்கக் குதிரை'யின் கால்கள் ஆற்று மணலில் படும்போது, அங்கிருக்கும் நீரூற்றுகள் ஊக்கமடைவதாக ஒரு அறிவியல் கலந்த நம்பிக்கை உண்டு.

4. 'தல்லாகுளம்' தண்ணீர் பீய்ச்சும் ரகசியம்:

சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி அழகர் மீது பீய்ச்சுவார்கள். இது அழகரின் சினத்தைத் தணிக்க என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் ஒரு மருத்துவக் காரணம் உண்டு. சித்திரை மாதக் கடும் வெயிலில் லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அம்மை போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இந்தத் தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள் மற்றும் சில மூலிகைகள் கலக்கப்படுகின்றன. அழகர் மீது பட்டு அந்தத் தீர்த்தம் மக்கள் மீது தெளிக்கப்படும் போது, அது ஒரு இயற்கை கிருமிநாசினியாக செயல்படுகிறது.

5. 'சைவ-வைணவ' உடன்படிக்கை :

மீனாட்சி அம்மன் (சைவம்) மற்றும் கள்ளழகர் (வைணவம்) விழாக்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது ஒரு மிகப்பெரிய சமூக நல்லிணக்கப் புரட்சி. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், இரு வேறு நேரங்களில் நடந்த இந்த விழாக்களை ஒன்றிணைத்தார். இதில் மறைந்திருக்கும் ரகசியம் என்னவென்றால் மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களையும், நகரத்து மக்களையும் ஒரே புள்ளியில் இணைக்க அவர் கையாண்ட தந்திரம் தான் இது. இன்றும் மதுரை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்த 12 நாள் திருவிழா இருக்கிறது.

6. சாப விமோசனம் :

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தைக் காண, கள்ளழகர் அழகர் மலையிலிருந்து புறப்பட்டு வருகிறார். ஆனால், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கள்ளழகர், வைகை ஆற்றைக் கடக்காமல், ஆற்றில் இறங்கி மக்களுக்குக் காட்சியளித்து விட்டுத் திரும்புகிறார் என்பது தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் அழகர் மலையில் தவம் செய்த சுதபஸ் முனிவரை, துர்வாச முனிவர் தவளையாக (மண்டூகமாக) மாறும் படி சாபமிட்டார். அந்த சாபம் நீங்க, கள்ளழகர் வைகை ஆற்றில் வந்து, தேனூர் மண்டபத்தில் அந்த முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருவதற்கு இது தான் முக்கிய காரணம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kula Deivam : குல தெய்வம் உங்கள் வீட்டிற்குள் வர மறுக்கிறதா? தெய்வம் வாசலிலேயே நிற்கிறதா? குலதெய்வ கட்டு உடைப்பது எப்படி.! இதோ தீர்வு.!
Adi shankara Jayanti ஸ்ரீ சங்கர ஜெயந்தி... ஆதி சங்கரர் பற்றி பலரும் அறியாத 5 'அதிசய' ரகசியங்கள்