குபேரன், அஷ்டலக்ஷ்மிகளின் அருள் கிடைத்து வாழ்வில் செல்வ செழிப்போடு ஒரு வாழ இந்த தீபத்தை ஏற்றி வழிபடுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 29, 2023, 5:31 PM IST

இன்று நாம் நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் என்ன சிறப்பு என்பதை இந்த தொகுப்பில் காண உள்ளோம்.



தினமும் வீட்டில் விளக்கேற்றுவது என்பது பாரம்பரிய சம்பிரதாயமாக உள்ளது. விளக்கு ஏற்றுவதில் பல விதங்கள் உள்ளன. அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது, காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவது , எலுமிச்சையில் விளக்கேற்றுவது என்று பல விதங்களில் விளக்கினை ஏற்றலாம். அந்த வகையில் இன்று நாம் நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் என்ன சிறப்பு என்பதை இந்த தொகுப்பில் காண உள்ளோம்.


மஹாலக்ஷ்மி அருள் பெற அகல் விளக்கும் , துர்க்கை அம்மன் அருள் பெற எலுமிச்சை விளக்கும் ஏற்றப்படுகிறது. அதே போல் அஷ்டலக்ஷ்மிகளின் அருள் பெற நெல்லிக்காய் தீபம் சிறந்ததாக கருதப்டுகிறது.

நெல்லிக்காயில் தீபம் ஏற்றுவதால், அஷ்டலக்ஷ்மிகளின் அருளோடு குபேர சம்பத்தும் ஒரே சேர கிடைப்பதால் வீட்டில் நிரந்தரமான செல்வமும் , மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.


அஷ்டலக்ஷ்மி அருள் பெறுவதற்கு:

அஷ்டலக்ஷ்மிகளின் அருள் கிடைக்க பௌர்ணமி அல்லது வெள்ளிக் கிழமை அன்று இந்த நெல்லிக்காய் தீபத்தை ஏற்றி தொடர்ந்து 21 நாட்கள் ஏற்றி வந்தால் நல்லதொரு மாற்றத்தை காணலாம். வீட்டில் அஷ்டலட்சுமி படம் இருப்பின், அதை வைத்து இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து அதில் உள் பாகத்தினை மட்டும் கீறி விட்டு குழி போன்று செய்து அதில் நெய்யூற்றி பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

இப்படியான நெல்லிக்காயில் விளக்கேற்றும் முன்பு அதில் புள்ளிகளோ அழுக்குகளோ இல்லாமல் இருப்பதை கவனிக்க வேண்டும். இப்படி இரண்டு நெல்லிக்காய்களில் விளக்கேற்றி அதனை கிழக்கு திசையில் நோக்கி இருக்குமாறு செய்ய வேண்டும். இப்படி ஏற்றிய பின் அஷ்டலக்ஷ்மி,மகாலட்சுமி மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை கூறி அல்லது ஒலிக்க செய்து வழிபடுங்கள். பின் நெய்வேத்யமாக பசு நெய் கலந்த சர்க்கரை பொங்கல் செய்து வழிபட்டால் இழந்த செல்வங்களும் ,சொத்துக்களும் கிடைக்கும். தவிர வாழ்வில் செல்வ செழிப்போடும் வாழலாம்.

குபேரன் அருள் பெறுவதற்கு:

இதே நெல்லிக்காய் தீபத்தை குபேரனுக்கு செய்ய வேண்டுமாயின் வளர்பிறை புதன் கிழமையில் துவக்க வேண்டும். 5 புதன் கிழமை தொடர்ந்து தீபம் நெல்லிகாய் தீபம் ஏற்றி தீபத்தை வடக்கு திசை பார்த்து வைத்து, பின் குபேர ஸ்துதி கூறுவது அல்லது ஒலிக்க செய்வது மிகச் சிறப்பாகும். நெய்வேத்தியமாக பச்சை நிறத்தில் இருக்கும் பாசிப்பருப்பு எனப்படும் பச்சை பயிரை அவித்து தரலாம். தவிர இதனை ஒவ்வொரு புதன் கிழமையும் ஏற்றி வந்தால் பொன் ,பொருள், பணம் ஆகியவை கிடைக்க பெற்று உங்கள் வீடு மாளிகையாகும். வியாபாரம் செய்பவர்களும் இதனை நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு வந்தால் உங்கள் வியாபாரம் சிறந்து எல்லையில்லா லாபத்தை அடைவீர்கள்.

சுட்டெரிக்கும் வெயிலிலுக்கு சில்லென்ற நுங்கு ரோஸ்மில்க் செய்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்!

Tap to resize

Latest Videos

click me!