பெண்கள் காலில் குங்குமத்தை பூசி கொண்டால், வீட்டில் பணம் பெருகும் என்கிறார்கள். ஜோதிடம் இப்படியா சொல்கிறது?

By Ma Riya  |  First Published Mar 29, 2023, 3:35 PM IST

குங்குமத்தை பெண்கள் தங்களுடைய கால்களில் பூசி கொண்டால் பணம் பெருகும் என்கிறது ஜோதிடம். இன்னும் பல விதமான பலன்களும் கிடைக்குமாம் அதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 


குங்குமம் இந்து மதத்தில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. திருமணத்தின் போது, ​​மணமக்கள் பாதத்தில் குங்குமம் பூசும் பழக்கம் சில மாநிலங்களில் உள்ளது. குங்குமம் பெண்களை சீர்ப்படுத்தலின் ஒரு அங்கம். இதை கால்கள் அல்லது கைகளில் பூசுவது பல ஜோதிட பலன்களைத் தருகிறது. குங்குமத்தை பெண்களின் காலில் பூசுவது மகாலட்சுமி வீட்டிற்கு வருவதற்கான அறிகுறியாகும். 

அதிர்ஷ்டம் 

Tap to resize

Latest Videos

குங்குமத்தின் நிறம் சிவப்பு. சிவப்பு வண்ணம் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. இந்த வண்ணம் மகாலட்சுமியுடன் தொடர்புடையது. பெண்கள் தங்கள் காலில் குங்குமத்தை பூசிக்கொள்ளும் வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். அவர்களின் வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். 

செவ்வாய் கிரக அனுகிரகம் 

செவ்வாய் கிரகத்தின் நிறமும் சிவப்பு தான். அதனால் பெண்கள் பாதங்களில் குங்குமத்தை பூசுவது செவ்வாய் பாக்கியத்தை கிடைக்க செய்யும். உங்கள் வீட்டு பெண்கள் தங்கள் காலில் குங்குமத்தை பூசிக்கொண்டால், அவர்களையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ செவ்வாய் தோஷம் பாதிக்காது.  

இதையும் படிங்க: புஷ்பராகம் அணிந்தால் செம்ம அதிர்ஷ்டம்... யார் அணியலாம்?

பாதத்தில் குங்குமம் பூசுவதன் நன்மைகள்

சிவபெருமானின் பார்வதி தேவியும் குங்குமத்தை மிகவும் விரும்புவதாக நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் காலில் குங்குமத்தை பூசினால், அவர்களின் திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சி, அன்பு, செழிப்பு நிறைந்ததாக இருக்கும். காலில் குங்குமம் கரைத்து பூசி கொள்ளும் பெண்கள், தங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுகிறார்கள். திருமணம் ஆகாத கன்னிப் பெண் தன் காலில் குங்குமத்தை பூசிக்கொண்டால், சிவனைப் போன்ற வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் வாக்கப்பட்டு செல்லும் மாமியார் வீட்டில் மிகுந்த அன்பை பெறுவார்கள் என்றும் ஜோதிடத்தில் விளக்கம் உண்டு. 

பெண்கள் குங்குமத்தை பாதங்களில் பூசுவதால் அசுபங்கள் வீட்டிற்குள் வராது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, பெண்கள் தங்கள் காலில் குங்குமத்தை பூசிக்கொண்டால், அவளுடைய வீட்டு ஆண்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள் என்பது ஐதீகம். காலில் குங்குமம் பூசும் பெண்களின் கணவருக்கு எந்த நெருக்கடியும் ஏற்படுவதில்லை. நலம் வாழுவார்கள். 

இதையும் படிங்க: ராமநவமி 2023 எப்போது? அன்றைய தினம் ராம நாமம் 1 முறை சொன்னால்... இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்..!

click me!